எழுத்திலக்கணம்070
கூட்டினால் (கூட்டெழுத்து, அளபெடை போன்ற) மற்ற எழுத்துகளுக்குரிய மாத்திரை புலப்படும் என்றவாறு.
மெய்மேல் உயிர் ஏறிய உயிர்மெய் அவ்வுயிரின் மாத்திரையைப் பெறுகிறது. ஓர் இனமெய்யுடன் அதே இன உயிர்மெய் சேர்ந்த க்க, ய்ய, ன்ன போன்றவை எவ்வாறு அலகிடப்பட வேண்டும் என்பதனையும், உயிர், ஒற்று அளபெடைகளின் மாத்திரை அளவுகளையும் இந்நூற்பா கூறுகிறது. க்க போன்றவை 1 1/2 மாத்திரை; ஈஇ போன்றவை 3 மாத்திரை; இலங்ங்கு போன்ற மெய்யளபெடை 1 மாத்திரை என்று கொள்க.
யாப்பில் பல இடங்களில் ஒற்றுக்கள் அலகிடப்படாததால் க்க போன்ற புணர்எழுத்துகளின் மாத்திரை உரைக்க வேண்டுவதேனோவெனில், சீர் தளை பற்றி வராமல் மாத்திரை பற்றி வரும் விருத்தங்களும் தமிழில் பெருமளவில் வழங்கி வருவதால் கூற வேண்டுமென்க. ரட்டையாசிரிய விருத்தம் இதற்கு உதாரணமாம்.
(63)
64.ஒலிநிலை அளவாம் மாத்திரை உரைத்தனம்;
 இயங்கும் நிலைசிறிது இயம்புதும் அன்றே.
எழுத்துகளின் ஒலி அளவைக் கூறினோம். இனி அவற்றின் இயக்கத்தைச் சற்றே கூறுவாம் என்றபடி.
இந்நூற்பாவால் ஒலிநிலையை முற்றுவித்து அடுத்த இயங்குநிலைக்குத் தோற்றுவாய் செய்து கொள்கிறார்.
(64)
2. இயங்கு நிலை
65.வாய்திற என்கைக்கு ஆஎன்று உலகோர்
 பகர்வதுஉற்று உணரில் பல்வகை எழுத்தும்
 அதனால் தோன்றல்என்று அறிதல்மிக்கு எளிதாம்
 அன்றியும் உலகத்து அனைத்து எழுத்தினுக்கும்
 அகரம் முதல்என்று அறைந்ததுஎம் மறையே.
உலகத்தில் பலரும் “வாயைத்திற” என்னும் பொருளில் “ஆஎனச்சொல் எனக் கூறுவதை நோக்கினால் எழுத்துகள்