அனைத்தும் அகரத்தால் தோன்றுகின்றன என்பதை எளிதில் உணர முடியும். மேலும் தமிழின் சிறப்புமறையாகிய திருக்குறள்” “அகர முதல எழுத்தெல்லாம்1” எனக் கூறியுள்ளது என்றவாறு. |
உலகத்தோர் கூற்றாகிய காட்சி அளவையானும், திருக்குறள் ஆகிய நூல் அளவையானும் தன்கோள் நிலைநாட்டப் பட்டது. வடமொழி வேதம் பொதுவும் திருக்குறள் தமிழர்க்குச் சிறப்பும் ஆகும் என வலியுறுத்த எம்மறை எனக்கூறப்பட்டது. (65) |
66. | அகரப் பிறப்பே இகரமும் உகரமும் | | என்கைக்கு உறுதுணை எழில்முகக் குறியே, |
|
அகர இகர உகர வரிவடிவங்களின் முதலில் வரையப்படும் கிளிமுகம் போன்ற சுழியே இ,உ ஆகிய இரண்டும் அகரத்தைப் போன்ற பிறப்பையே உடையன என்பதை உணர்த்தும் என்றவாறு, |
அகரவடிவங்கூறும் 7 ஆம் நூற்பாவில் கிளிமுகம் என்றதை இங்கு எழில்முகம் என்றார். “கிளிமுகம்போலச் சுழித்து”2 என்று அங்கே கூறி இகரத்தில், “களம்வரை அகரம் ஆம் எனக்காட்டி”3 என்று உகர வடிவில், “சுழியில் வலங்கீழ்ப்பற்றி”4 என்றதோடு ஒப்பிட்டு நோக்கினால் இப்பொருள் விளங்கும். |
இனி இவ்வாறன்றி எழில்முகம் என்பதற்கு உச்சரிப்பவரின் முகம் என்றோ அல்லது வாய் என்றோ பொருள் கொள்ளலாகாதோ எனின், அங்ஙனம் கொள்ளின் அங்காத்தலால் மட்டும் தோன்றும் அகரத்தோற்றம், இதழ்களின் விரிவினால் பிறக்கும் இகரத்தோற்றம், உதடுகளின் குவிதலினால் உண்டாகும் உகரத்தோற்றம் என்னும் இவற்றிடை ஒற்றுமை இன்மையால் அஃதுரையன்று என்க. (66) |
|