67. | அகரமும் இகரமும் அணைவுறின் எகரமே. | | |
| அகரம் இகரம் ஆகிய இவ்விரண்டு எழுத்துகளும் கூடினால் எகரம் ஆகும் என்றவாறு. | “அகர இகரம் ஐகாரம் ஆகும்”1 “அகர உகரம் ஒளகாரம் ஆகும்”2 “அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”3 என்பன தொல்காப்பியம் இச்சுத்திரங்களுள் இவை தள்ளப்படற்குரிய போலி எழுத்துகள் எனத்தொல்காப்பியர் கூறவேயில்லை. இஃது உரையாசிரியர்களாக வலிந்து கூறியதேயாகும். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் சுட்டுகின்ற ஐவனம், அஇவனம்; ஒளவை அஉவை போன்றன வெறும் மேற்கோள்களாகவன்றி இலக், கிய வழக்கிலோ அன்றி உலக வழக்கிலோ எங்கும் ஆட்சியிற் காண்கிறோம் இல்லை. ஆனால், அய்யம், ஐயம் என்றும் அவுடதம், ஒளடதம் என்றும் யகரவகரங்கள் பெற்ற சொற்கள் பலவற்றைக் காண்கிறோம். எனவே பண்டைய உரையாசிரியர்களின் அணுகுமுறையை விட இம்மூன்று சூத்திரங்களையும் ஒருங்கிணைத்துப் பொருள் கொள்ளும் சிவஞானமுனிவருடைய உரையே4இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் உரைக்கும் சீரிய முறையாகும். | இவ்விலக்கண ஆசிரியர், “எகரமாவது அகரக்கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்து இசைத்து நரமடங்கல் போல் நிற்பதொன்று ஆகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உகரக்கூறும் தம்முள் ஒத்து இசைத்து அவ்வாறு நிற்பதொன்றாகலானும்”5 என்னும் வடமொழி மரபு பற்றிய சிவஞானமுனிவரைப் பின்பற்றி இச்சூத்திரம் செய்தார். | தமிழ் எகரம் அகர இகரத்தின் கூட்டமா என்பது ஆய்விற்குரியது. (67) | |
|
|