எழுத்திலக்கணம்074
71.ஒளகா ரத்தின் கடைக்குறி பற்றி
 ஊகாரம் அதனூடு உற்றது என்பார்.
 அம்முறை என்நூற்கு ஆகாது அன்றே.
ஒளகார வரிவடிவின் ஈற்றில் ஊகாரத்தில் உள்ள ளகர வடிவம் இடம் பெற்றிருப்பதால் ஒளகாரத்தில் ஊகாரம் இணைந்துள்ளது என்று சிலர் சொல்வர். அக்கொள்கை என்னால் செய்யப்படும் இந்த இலக்கணத்திற்கு ஏற்புடையது அல்ல என்றவாறு, அன்றே-அசைநிலை.
ஒளகாரத்தில் ஊகாரம் இருப்பதாக நூல் செய்தவர் யார் என விளங்கவில்லை. ஒளகாரத்தை ஒன்றரை மாத்திரையுடைய நடுவுயிராகக் கொள்ளுமிந்நூல் அதற்குள் இரண்டு மாத்திரையுள்ள நெடில் உள்ளது என்றால் மறுக்க வேண்டியது இயல்பே.
(71)
72.ஆய்தமோடு ஒற்றும் பிணமே போல்வன
 ஆதலின் இயக்கம் அறைந்திலம் ஆயினும்
 அகரச் சார்பே ஆம்எனில் தகுமே.
ஆய்தமும் மெய்யும் உயிரற்றவை ஆகும். எனவே அவற்றின் இயக்கத்தைத் தனியே கூறவில்லை. என்றாலும் அவை அகரச்சார்பு உடையன எனக் கொள்ளலாம் என்றவாறு.
65 ஆம் நூற்பாக்கருத்தோடு தொடர்புடையது இது.
(72)
73.அகரம் பதினெட்டு ஒற்றினும் அணைந்து
 க, ங, ச, ஞ, ட, ண, முதற் பிறவும் ஆமே.
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மீதும் அகரம் ஊர்ந்து முறையே ககர முதல் னகரமீறாகிய உயிர்மெய்களாகும் என்றவாறு.
(73)
74.ஆஎழுத்து ஒற்றினத்து அணையும் காலை
 கா, ஙா, சா, ஞா ஆதிய கவினுமே.
 க் முதல் ன் வரையான ஒற்றெழுத்துகளின் மீது ஆகாரம்