ஊர்ந்து முறையே கா முதல் னா ஈறாகிய பதினெட்டு உயிர் மெய் தோன்றும் என்றவாறு. (74) |
75. | இகரம் ஒற்றினத்து இசையும் ஆயின் | | கிகர ஙிகரம் ஆதிய கிளருமே. |
|
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் இகரம் ஊர்ந்து முறையே கி முதல் னி ஈறாகிய உயிர்மெய் தோன்றும் என்றவாறு. (75) |
76. | ஈகாரம் ஒற்றுத் தொறும்போய் இசைதலின் | | கீ, ஙீ தொட்டு னீவரை வருமே. |
|
க் முதல் ன் வரையான மெய்களின் மேல் ஈகாரம் ஊர்வதால் முறையே கீ முதல் னீ ஈறாகிய பதினெட்டு உயிர்மெய்யும் தோன்றும் என்றவாறு. (76) |
77. | உகரம் ஒற்றுஇனத்து உறுமேல் குகரம் | | ஙுகரம் ஆதி னுவ்வரை ஒளிருமே. |
|
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் உகரம் ஊர்ந்தால் முறையே குகரம் முதல் னுகரம் ஈறாகிய உயிர்மெய் தோன்றும் என்றவாறு. (77) |
78. | ஊ, ஒற்று இனத்துஉறின் கூஙூ ஆதி | | னூ வரை வரும்என நுவல்வது முறையே. |
|
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் ஊகாரம் ஊர்ந்தால் முறையே கூ முதல் னூ வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு. (78) |
79. | எகரப் பொறிஒற்று இனத்துஉறில் கெகர | | ஙெகரம் ஆதி னெவ்வரை நிகழுமே. |
|
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் எகரம் ஊர்ந்தால் முறையே கெ முதல் னெ வரையான உயிர் மெய் தோன்றும் என்றவாறு. (79) |