80. | ஏ, ஒற் றிடையுறில் கேஙே தொட்டு | | னேவரை வரும்என நிகழ்த்திடல் முறையே. |
|
ஏகாரஉயுர் க் முதலிய பதினெட்டு மெய்களோடும் சேர்ந்தால் முறையே கே முதல் னே வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு. (80) |
81. | ஒற்றோடு ஐயெழுத்து உறுமேல் கைமுதல் | | ஆகி, னை ஈறாம் அறுமூன்று அவிருமே. |
|
ஐகான் க் முதலிய பதினெட்டு மெய்களோடும் கூடினால் முறையே கை முதல் னை வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு. (81) |
82. | ஒற்றுத் தொறும்போய் ஒகரம் புகலால் | | கொகர ஙொகரம் ஆதிய குலவுமே. |
|
ஒகரம் பதினெட்டு மெய்களோடும் கூடினால் முறையே கொ முதல் னொ வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு. (82) |
83. | மெய்களில் ஓஉறில் கோ, ஙோ ஆதிய | | பொறிமூ வாறும் பொலியும் அன்றே. |
|
ஓகாரம் மெய்களோடு கூடினால் முறையே கோ முதல் னோ ஈறான பதினெட்டு உயிர்மெய்யும் தோன்றும் என்றவாறு, (83) |
84. | ஒளஎனும் உயிர்தான் அறுமூன்று உடல்கொடு | | கௌவ்வே முதலா னௌவ்வரை காட்டுமே. |
|
ஒளகார உயிர் பதினெட்டு மெய்களொடும் பொருந்தினால் முறையே கௌ முதல் னௌ ஈறாகிய உயிர்மெய் தோன்றும் என்றவாறு. (84) |
85. | மற்றைமூ வகைஎழுத்து ஒலிவரு மாறே | | இயக்கமும் ஆம்என்று இயம்பிடல் மரபே. |
|