திரிந்து முடிகிறது.1 அவ் + கடிய = அஃகடிய; இவ் + தீய = இஃதீய; உவ் + பெரிய = உஃபெரிய எனவரும் எனப்படுகிறது. (இவ்வழக்கு நச்சினார்க்கினியர் காலத்திலேயே அருகிவிட்டதுண்மையே2.) மேற்கூறப்பட்ட மூன்று விதிகளிலும் ஆய்தமாகத் திரிபவை ல,வ,ள என்ற இடையின மெய்களே என்பது நோக்கத்தக்கது. ஆய்தம் அவற்றிற்கு இனமாதல் பற்றியன்றோ திரிபுநேர்கிறது. |
மிடற்றெழு வளியால் மேவிய பிறப்பும் |
நாவோடு அண்ணத் தொடர்புஉறு முயற்சியும் |
லளவ மெய்யீறு தனிநிலை யாகச் |
சிற்சில புணர்வில் திரிதரல் உண்மையும் |
ஆயுங் காலை அருந்தமிழ் எழுத்தில் |
ஆய்தம் இடையினத்து ஒற்றுப் போலுமே. |
இது நூற்பாவை விரித்த உரைச்சூத்திரம், (92) |
93. | அலகுஆதி மூன்றும் பிறழ்தரும் இனமே. | | |
|
அலகு, கூட்டு, குறிப்பு ஆகிய மூவகை எழுத்துகளும் மாறுகின்ற இனத்தைச் சேர்ந்தனவாகும் என்றவாறு. |
ண என்பது கீழ் முந்திரியைக் குறிக்கும் எழுத்து. உ என்பது இரண்டின் குறியீடு, இவைகள் ண, உ எனப்படிக்கப்பட்டால் முறையே மெல்லினமும் (இவர் கொள்கைப்படி) பொதுவினமும் ஆகும். ஆனால் முந்திரி, இரண்டு எனவே தொடர்மொழிகளாகப் படிக்கப்படும், இவற்றுள் பலஇனங்களும் கலந்து வருதல் கண்கூடு. |
தனிஎழுத்திற்கன்றித் தொடர்மொழிகளுக்கு இனம் கூற வேண்டியது இல்லையெனினும் இவர் வரிவடிவு கொண்டு ஏழ்வகை எழுத்துகள் கொண்டமையின் இந்நூற்பா இன்றியமையாததாயிற்று. (93) |
|