எழுத்திலக்கணம்082
என்னவில்லை. இந்நூற்பாவின் பல கருத்துகள் இவருடைய சொந்தக் கொள்கைகளாகும். அடுத்துத் தெய்வம் பற்றிய கொள்கையிலும் இவர் முந்து நூல்களினின்றும் முரண்படுவதைத் தெளிவாகக் காணலாம்.
(94)
95.இனநிலை கூறினம்; எழுத்துத் தோறும்
 தெய்வ நிலைஉள செப்புதும் சிறிதே.
இதுகாறும் எழுத்துகளின் இனநிலை கூறினாம். இனி ஒவ்வொரு எழுத்திலும் நிலைத்து விளங்குகின்ற தெய்வங்களைப் பற்றி சசிறிது கூறுவாம் என்றவாறு.
இந்த இறுதிச் சூத்திரத்தால் இன நிலையை முற்றுவித்து அடுத்த தெய்வநிலைக்குத் தோற்றுவாய் செய்து கொள்கிறார்.
எழுத்துகளைத் தெய்வங்களோடு தொடர்புபடுத்தி நோக்குகையில் மற்ற பாட்டியல் நூல்களுக்கும் இவருக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. பிற நூல்கள் எந்த எந்த எழுத்து எந்த எந்தத் தெய்வத்தால் பிறப்பிக்கப்பட்டன எனக் கூறுகின்றன. “முந்நான்கு உயிரும் முதல்வன் படைத்தான்”1 “மூவாறு உடம்பும் படைத்தனரே”2 “மூவாறு ஒற்றும் கருதிச் செய்தார்”3 என்பனவற்றால் இது தெளிவாகிறது. (மேலும் காண்க: வெண்பாப் பாட்டியல்11; பன்னிரு பாட்டியல் 4; இலக்கண விளக்கம் 778; சுவாமி நாதீயம் 175. தொன்னூல் விளக்கம் பொருத்த விளக்கம் ஆகிய இரண்டும் முறையே கிருத்தவ, இசுலாமிய நூலாதலின் தெய்வம் பற்றிக்கூறப்படவில்லை.)
ஆனால் இவர் தெய்வங்கள் எழுத்துகளைப் படைத்ததாகக் கொள்ளாமல் அவற்றுள் நிலைபெற்றிருப்பதாகக் கூறுகிறார். எனவேதான் எழுத்துத்தோறும் உள தெய்வ நிலை எனக் கொண்டு கூட்டப்பட்டது. இவர் கோட்பாடு பீஜாட்