அறுவகையிலக்கணம்083
சரங்களைக் கொள்ளும் மந்திர சாத்திரத்தோடு தொடர்புடையதாகும்.
(95)
4. தெய்வநிலை
96.அகரஆ காரத்து அயனொடு கலைமகள்;
 இகரஈ காரத்து அரியுடன் எழில்திரு;
 உகரஊ காரத்து அரன்உமை; எகர
 ஏகா ரத்தில்ம யேச்சுரன் யாமளை;
 ஒகரஓ காரத்து ஈசன்ம னோன்மணி
 நிலைஇய பண்புணர் நெறிஎளிது அலவே.
அகர ஆகாரங்களில் முறையே பிரமனும் நாமகளும், இ,ஈ எனும் இவற்றில் திருமாலும் திருமகளும், உகரஊகாரங்களில் முறையே சிவபெருமானும் உமையம்மையும், எ,ஏ எனும் இவற்றுள் மகேச்சுரனும் யாமளையும், ஒகர ஓகாரங்களில் முறையே ஈசனும் மனோன்மணியும் நிலைபெற்றுள்ளனர், ஆனால் இதனை உணர்ந்து கொள்வது எளிதானது அன்று என்றவாறு.
மந்திரம் பலகோடி முறை விதி வழுவாது செபிக்கப்பட்டு அது கைவரப்பெற்றால்தான் (சித்தி) அதன் வடிவம் விளங்கும் என்னும் மாந்திரிகக் கொள்கை பற்றி உணர் நெறி எளிது அல என்றார். எழுத்துகளின் தெய்வநிலை பற்றிய இவர் கருத்துகள் பிற பாட்டியல் நூலுடையாருடன் அடிப்படையிலேயே வேறுபடுதலால் அவற்றோடு ஒப்புநோக்கப்படவில்லை.
(96)
97.ஐகா ரத்தில் அயில்வேற் குருபரன்
 ஒளகா ரத்தில் அவன்துணை உறுமே.
ஐகாரத்தில் முருகக் கடவுளும், ஒளகாரத்தில் அவனுக்கு மூத்த விநாயகரும் நிலைபெற்றுள்ளனர் என்றவாறு.
(97)
98.ஆய்தத்து அருக்கன் ஆதிமுச் சுடரும்
 பொலிதரும் என்னப் புகலல் ஆகுமே.