108. | ஏகாரம் ஒருவர்க் குணர்த்தும் குறியாம், | | உறுதி காட்டும் கருவி ஆகிப் | | பெயருடன் இருவிதத்து அணைந்து விளியாம்; | | அங்குபோ காதே; என்சொல் மெய்யே; | | ஏகுகா; குருவே எனும்நான்கு உதாரணம், |
|
ஏகாரம் (எதிரில்உள்ள) ஒருவருக்கு (ஒருசெயலைச் செய்ய வேண்டாம்) என அறிவிக்கும் (எதிர்மறை ஏவல்) விகுதியாகவும், ஒன்றைப் பிறவற்றினின்று பிரித்தோ அன்றிப் பிரிக்காமலோ உறுதிப்படுத்தும் விகுதியாகவும், ஒரு பெயர்ச் சொல்லுடன் முன்னும் பின்னும் இணைந்து விளிப்பொருள் தருவதாகவும் வரும். அங்கு போகாதே, என் சொல் மெய்யே, ஏ குகா, குருவே என்ற நான்கும் முறையே இவைகட்கு உதாரணங்களாம் என்றவாறு. |
பொதுவாக ஏகாரம் எதிர்மறை ஏவல் விகுதியாகவே வரும். ஒரு செயலால் நேரும் பின்விளைவை உணர்த்தியே எதிர்மறை ஏவல் உரைக்கப்படுகிறது. நூற்பாவிலேயே இடம் பெற்ற எடுத்துக்காட்டிற்கிசைய இக்கருத்துகளை யுளங்கொண்டு உரையுள் சில சொற்கள் வருவித்துக் கொள்ளப்பட்டன. |
என் சொல் மெய்யே என்புழி மெய் என்பதற்கு முதன்மை அளித்தால் தேற்றேகாரமாகவும், பொய்யன்று எனக் கொண்டால் பிரிநிலையும் ஆம். இரண்டின் பயனும் உறுதிப் படுத்தலேயாதலின் இவர் ஒன்றே கூறினார். |
ஏ குகா போன்ற இடங்களில் ஏ என்பதனை இவ்வாசிரியர் ஒரு சொல்லாகவே கருதுகிறார். இது “ஏஎனல் ஆதிய விளிச்சொல் ஆமே”1 என்பதனால் நன்கு தெளிவாகிறது. (108) |
109. | ஐகாரம் ஒருபெயர் ஈற்றிற் புணர்ந்து | | மற்றும்ஓர் சொல்லின் வரவு நோக்கும்; | | குமரனை என்று கூறிடல் தாரணம். |
|
|