ஐ என்ற எழுத்து ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் கூடி (இரண்டன் உருபாகித்) தன் பொருள் முடிவதற்குப் பிறிதொரு (வினைச்) சொல்லை அவாவி நிற்கும். குமரனை என்பது எடுத்துக்காட்டாம் என்றவாறு. (109) |
110. | ஓஎனல் வினாவோடு எதிர்மறை உணர்த்தும்; | | உறவோ என்கை உதாரணம் ஆமே. |
|
ஓகாரம் வினாப் பொருளிலும், எதிர்மறையாகவும் வரும். உறவோ என்ற சொல்இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு. |
உறவோ என்ற சொல் உறவினரா என்ற பொருளில் வினாவாகத்தான் வருகிறது. ஆனால் இதுவே, “சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்றது உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும் எண் இறையுள்”1 இறைப்பொருள் பயக்கும் விடையாக அமைந்து “உறவல்லர்” என்னும் எதிர்மறைப் பொருள் தருகிறது. இதனைத் தெளிவாக்கவே இந்நூலாசிரியர் இரண்டிற்கும் ஒரே சொல்லை எடுத்துக் காட்டினார். (110) |
111. | குகரமும், கைஎனும் எழுத்தும், மை காரமும் | | மோஎனும் பொறியும் மொழிஈற்று விகுதியாம்; | | அதுக்குச் செய்கை, உண்மை, கேண்மோ | | என்னும்நான் மொழியும் இலங்குஉதா ரணமே. |
|
கு, கை, மை, மோ ஆகிய நான்கெழுத்துகளும் ஒரு சொல்லின் இறுதியில் வருகின்ற விகுதிகள் ஆகும். அதுக்குச் செய்கை, உண்மை, கேண்மோ என்னும் நான்கு சொற்களும் எடுத்துக் காட்டுகளாகும் என்றவாறு. |
103 முதல் 110 வரையான 9 நூற்பாக்களில் உயிரெழுத்துகளைப் பற்றிக் கூறி முடித்து இதில் உயிர்மெய்களிற் சிலவற்றைக் கூறினார். இவற்றுள் கு என்பது நான்கன் உருபு. |
|