அறுவகையிலக்கணம்089
கை தொழிற்பெயர் விகுதி. மை பண்புப்பெயர் விகுதி. மோ முன்னிலையசை
(111)
112.ஆய்தமும் ஒற்றும் ஙகரமும் டகரமும்
 ணகரமும் ரகரமும் லகரமும் ழகரமும்
 ளகரமும் றகரமும் னகரமும் மொழிமுன்
 நில்லா என்று நிகழ்த்திடல் மரபே.
ஆய்தம், மெய்யெழுத்துகள், ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன, ஆகிய ஒன்பது வர்க்க உயிர்மெய் ஆகியன ஒரு சொல்லின் முதல்நிலையாக நிற்கப் பெறா என்றவாறு.
இங்கு கூறப்படாத க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ ஆகிய ஒன்பது வர்க்கங்களும் பொதுவகையான் மொழிமுதல் ஆகும் எனக் கொள்ளவேண்டுமேயன்றி இவ் வர்க்கத்தைச் சேர்ந்த நூற்றெட்டு உயிர்மெய்களும் முதலாம் எனக் கொள்ளலாகாது. இந்நூற்பா “பன்னீ ருயிரும் கதந பமஎனும் ஆவைந்து எழுத்தொடு சவஞய உளப்பட அவ்வொன் பான்உயிர் மெய்யும் மொழிமுதல்”1 என்றதைப் போன்று பொதுவிதி கூறுவதாகும். சிறப்பு விதிகள் இந்நூலில் கூறப்படவில்லை. நிகழ்த்திடல் மரபே என்றதனால் புதியன புகுதலாகச் சில சொற்கள் நூல் வழக்கிலும் இடம் பெற்றுவிட்டால், “கடிசொல்லில்லைக் காலத்துப் படினே”2 என்னும் விதி பற்றித் தக்கவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உணர்த்தப்பட்டது. இது “கால வேற்றுமை கருதாப் புலவன் சீலனே யெனினும் சிறுமை யினனே”3 “உலகர்தம் வாய்பா டொருங்கு நீத்தலும் சேர்த்தலும் புலமைச் சீர்க்குஇழி வாமே”4 என இவரே இந்நூலிற் கூறுவதால் தெளிவாகிறது.
(112)
113.ஏனைய எழுத்தின் குணம்எலாம் பொதிய
 மால்வரைக் குவட்டின் வாழும்மா முனிவன்
 சீரடி மறவார் தெரிதற் பால;