ஆ + ஆளி = ஆவாளி; ஊ + இட்டான் = ஊவிட்டான் (துன்பம் தாளாது அனுங்கினான்); ஓ + என்றான் = ஓவென்றான். |
ஏழாமிலக்கணம் 11 ம் நூற்பா இத்துடன் தொடர்புடையது. (117) |
118. | ஈஏ எனும்இரு பொறியும் பின்வரும் | | உயிர்களை யகர வருக்கம் ஆக்கும்; | | ஈயல்ல எனலும், ஏயிருளா எனலும் | | தகும்உதா ரணம்எனச் சாற்றல் இயல்பே. |
|
ஈ, ஏ ஆகிய இரு நெடில்களின்பின் உயிர்எழுத்துகள் அணையுங்கால் அவ்வுயிரெழுத்துகள் யகரவருக்கமாகத் திரியும். ஈயல்ல, ஏயிருளா என்பவை உதாரணமாம் என்றவாறு. |
ஈ + அல்ல = ஈயல்ல. ஏ + இருளா = ஏயிருளா (விளி) |
ஏழாமிலக்கணம் நூற்பா 12 காண்க. (118) |
119. | ஐஒள இரண்டும் அணைதரும் மொழிக்கண் | | யவமெய் யொலியெனத் திகழ நிற்பன; | | கையனும் ஐயனும் ஒளவையும் உதாரணம். |
|
ஐகார ஒளகாரங்கள் இரண்டும் தாம் வருகின்ற சொற்களில் முறையே யகர வகர மெய்யெழுத்தின் ஒலியை உடையதாக விளங்கும். கையன், ஐயன், ஒளவை என்பன இதற்கான எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
கையன்-கய்யன், ஐயன்-அய்யன், ஒளவை-அவ்வை என யகர வகர ஒலிகளோடு உச்சரிக்கப்படுதல் காண்க. இவ்வுச்சரிப் பொற்றுமை பற்றியே இவை போலியாயின. |