அறுவகையிலக்கணம்095
குறிலை அடுத்தே வரும். ஆய்தத்தை அடுத்துவரும் எழுத்து எப்போதுமே வல்லினம் தான். எனவே இந்நூற்பாவிற்கு “ஓர் எழுத்தின்பின் ஆய்தம்வரின் அதனையடுத்து வல்லினம் மட்டும் வரும். இரண்டெழுத்துக்குப் பின் வந்தால் வேறினமும் வரலாம்” எனப்பொருள் கொள்ளக்கூடாது. இருபஃது - இது தனிமொழியன்று.
(121)
122.கசத பவமெய் ஐந்தும் தம்பின்
 தம்உயிர் மெய்யே வருமாறு அவிர்தரும்;
 பக்கமும், அச்சமும், முத்தியும், கப்பலும்,
 கொவ்வையும் நிரைநிரை குலவுஉதா ரணமே.
க,ச,த,ப,வ ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் தம்மை அடுத்துத்தம் வருக்கத்தைச் சேர்ந்த உயிர்மெய்களே வரப்பெறும். பக்கம், அச்சம், முத்தி, கப்பல், கொவ்வை என்பன முறையே இதற்கு எடுத்துக்காட்டு ஆகும் என்றவாறு.
இந்நூற்பா உடனிலை மெய்ம்மயக்கைக் கூறுகிறது. தம் உயிர்மெய்யே என்ற ஏகாரத்தால் பிற வாரா என விலக்கப்பட்டன.
முன்னூல்கள் தம்மோடு தாமே மயங்குவன க,ச,த,ப, ஆகிய நான்கே என்றன. இவ்வாசிரியர், “தன்ஒழி மெய்ம்முன் யவ்வரின் இகரம் துன்னும் என்று துணிநருள்”1 ஒருவராதலின் “கசதபவொழித்த ஈரேழன் கூட்டம் மெய்ம்மயக்குடனிலை”2 “வம்முன்யவ்வே”3 என்னும் விதிகளை அறிந்தே புறக்கணித்தார். உரையாசிரியர்கள் காட்டும் அவ்யாழ், தெவ்யாது போன்றன இவர் ஏற்காதவை. அவ்வியாழ், தெவ்வுயாது எனவே நிற்றல் வேண்டும் என்பது இவர் கோட்பாடு. “வகர ஈற்றில் கசதப ஞநவரின் உகரச் சாரியை நடுக்கொடு புணரும்; ,,,,,,,, வல்லுயிர் விபத்தியில் தெவ்வுக் கொலையென மிகலும் ஆகும்; தன் உயிர் வருங்கால் செவ்வேந்து எனல் போன்று இயல்பா நிற்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஏனைய வல்லோர் இசைப்பிற்