அறுவகையிலக்கணம்099
129.நகர ஒற்றுடன் அவ்வுயிர் மெய்யும்
 தகர உயிர்மெய்யும் சார்வதே தகுதி;
 எந்நா, கந்தன் எனும்இரண்டு உதாரணம்.
நகர மெய்யைத் தொடர்ந்து அதே உயிர்மெய்யும், தகர வருக்க உயிர்மெய்யும் மயங்கி வருவதே சிறப்பாகும். எந்நா, கந்தன் ஆகிய இரு சொற்களும் இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
“ஞநமுன் தம்மினம் யகரமொ டாகும்”1 எனினும் பொருந் யாது போன்ற புணர்ச்சிகளை இவர் ஏற்காததால்-யகரத்தை அது சிறந்ததன்று என்பார்-ஏகாரம் கொடுத்துச் சார்வதே தகுதி என்றார். இது பற்றி முன்பே கூறப்பட்டது. இதனை இறந்தது விலக்கலாகக் கொள்க.
(129)
130.மகர ஒற்றுடன் அதன்உயிர் மெய்யும்,
 பகர வகர உயிர்மெய்யும் புணரும்;
 செம்மையும் கும்பனும் சேதம்வராது எனலும்
 உதாரணம் ஆம்என்று உணர்வது முறையே.
மகர மெய்யைஅடுத்து ம, ப, வ ஆகிய மூவருக்கத்தைச் சேர்ந்த உயிர்மெய் எழுத்துகள் மயங்கப் பெறும். செம்மை, கும்பன், சேதம் வராது என்பன உதாரணங்களாம் என்றவாறு.
இங்கும், “மம்முன் பயவ மயங்கும் என்ப”2 எனும் விதியில் இருந்து யகரம் விலக்கப்பட்டது. கலம்+யாது = கலம்யாது எனலன்றி இவர் கலமியாது என்றே வேண்டுவர். இவ்வாசிரியர் “யகரம் ஒழிந்த ஈற்றுஒற்று எதனொடும் யகரவுயிர் மெய்வரில் இகரம் இடை தோன்றும்”3 எனக் கொள்பவர்.
(130)
131.னகர உடலுடன் அவ்வுயிர் மெய்யும்
 கசபற ஞமவவ் வருக்கத் துயிர்மெயும்