எழுத்திலக்கணம்100
வருவன; உதாரணம் புன்னை, வன்கண்மை,
 நின்சூல், இன்பம், குன்று, முன்ஞானம்,
 பொன்மணி, பின்வரல் எனும்இவை யாமே.
னகர ஒற்றைத் தொடர்ந்து ன, க, ச, ப, ற, ஞ, ம, வ ஆகிய எட்டு வருக்கத்தைச் சேர்ந்த உயிர்மெய்கள் வந்து மயங்கும். இதற்கு எடுத்துக்காட்டு புன்னை, வன்கண்மை, நின்சூல், இன்பம், குன்று, முன்ஞானம், பொன்மணி, பின்வரல் என்னும் சொற்களாம் என்றவாறு.“ணனமுன் இனம் கச ஞபமய வவ்வரும்”1 என்ற விதியிருந்தும் முன் நூற்பாவில் கூறப்பட்ட காரணத்தாலேயே யகரம் நீக்கப்பட்டது.
(131)
132.யகர ஒற்றொடு’ அவ்வுயிர் மெய்யும்
 கசதப நமவ எனும்ஏழ் வருக்கத்து
 உயிர்மெயும் இசைவுறும்; மெய்யன். பொய்கை,
 செய்சால், பெய்தான், எய்போர், பொய்நா,
 நொய்மா, நெய்வோன் எனும்சொற்கள் உதாரணம்.
யகர மெய்யின்முன் ய, க, ச, த, ப, ந, ம, வ ஆகிய எட்டு வருக்க உயிர்மெய்களும் வந்து மயங்கும். மெய்யன், பொய்கை, செய்சால், பெய்தாள், எய்போர், பொய்நா, நொய்மா, நெய்வோன் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
பவணந்தியார், “யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும்”2 என்றார். அப்பத்தினுள் இவர் ஞ, ங ஆகிய இரண்டினையும் புறக்கணித்தார். ஙகர மெய்யே வேய்ங்குழல் என்பது போன்று யகரத்துடன் மயங்குதலின் உயிர்மெய் கூறும் இந்நூற்பாவுள் அது விலக்கப்பட்டது. யகரமெய்முன் ஞகர உயிர்மெய் வருதலை இவர் இந்நூல் 150 ஆவது நூற்பாவில் உரைப்பதால் அதனையும் இங்கு மயக்கவிதியாக நாம் உரையிற் கொள்ள வேண்டும்.
(132)