133. | ரகர மெய்யுடன் கசதப ஞநமவக்கு | | உரிய உயிர்மெய் ஒன்றித் திகழும்; | | வளர்கை, உயர்சீர், குளிர்தாள், அவர்போல், | | ஊர்ஞாளி, ஓர்நாரி, நேர்மாரன், நீர்வாரி | | என்பவை உதாரணம் இனிதுஉணர் வார்க்கே. |
| ரகர ஒற்றுடன் க, ச, த, ப, ஞ, ந, ம, வ ஆகிய எட்டு வருக்க உயிர்மெய்யும் மயங்கும். வளர்கை, உயர்சீர், குளிர்தாள், அவர்போல், ஊர்ஞாளி, ஓர்நாரி, நேர்மாரன், நீர்வாரி என்னும் சொற்கள் எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. | நன்னூலார் மொழிமுதல் பத்துங் கொண்டார்.1 இவர் ங, ய என்னும் இரண்டையும் விலக்கினார். ஙகரத்தை விலக்கிய காரணம் முன் நூற்பாவிலும், யகரம் நீக்கப்பட்டது நூற்று முப்பதாம் நூற்பாவிலும், யகரம் நீக்கப்பட்டது நூற்றுமுப்பதாம் நூற்பாவிலும் கூறப்பட்டன. “ரழ ஒற்றுத் தம் உயிர்மெய்யே தழுவா2” என ரகரம் முன்னே விலக்கப்படினும் இவரால் பிறிதோரிடத்தில் மன்பதை வழக்கு நோக்கி “அவற்றிடை ரகரம் சிறுபால் விர்ரென எறிந்தான், சர்ரெனச் சென்றது எனவருமே”3 எனத் தழுவிக் கொள்ளப்பட்டுள்ளது. (133) | 134. | லகரமெய் யுடன்அதுட் புகும்உயிர் மெய்யும் | | கசபவக்கு உட்புகும் உயிர்மெயும் கவின்தரும்; | | சொல்லல், பல்கனி, வெல்சேந்தன், நவில்பா, | | செல்வம் என்னும் ஐம்மொழி உதாரணம். |
| லகர ஒற்றுடன் ல, க, ச, ப, வ என்னும் ஐந்து வருக்க உயிர்மெய்கள் மயங்கும். சொல்லல், பல்கனி, வெல்சேந்தன், நவில்பா, செல்வம் என்பன இதற்கு உதாரணங்களாம் என்றவாறு. | “லளமுன் கசப வயவொன் றும்மே”4 என்ற விதியில் முற்கூறப்பட்ட காரணம்பற்றி யகரம் விலக்கப்பட்டது. (134) | |
|
|