எழுத்திலக்கணம்102
135.ழகர ஒற்றும் ரகரமெய் போன்று
 கசதப ஞநமவக்கு ஆன உயிர்மெய்
 முன்னர் அவிர்தரும்; மொழிஉதா ரணங்கள்
 ஆழ்கடல், வாழ்சுரர், ஏழ்திரை, வீழ்பனி,
 அகழ்ஞாலம், திகழ்நாகம், பிறழ்மணி, இகழ்வோன்
 என்பவை தாம்என்று இசைத்திடல் இயல்பே.
ழகரஒற்றும் ரகரமெய்யைப் போன்று தன்முன் தான் மயங்காது. அது க, ச, த, ப, ஞ, ந, ம, வ என்னும் எட்டு உயிர்மெய்களுடன் மயங்கும். ஆழ்கடல், வாழ்சுரர், ஏழ்திரை, வீழ்பனி, அகழ்ஞாலம், திகழ்நாகம், பிறழ்மணி, இகழ்வோன் என்பன எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
“யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும்”1 என்றதில் முற்கூறிய காரணம் பற்றி ங, ய ஆகிய இரண்டும் விலக்கப்பட்டன. “ஐம்மூன்றதாம் உடல் வன்மைபின் வந்திடில் ஆறொடைந்தாம் மெய்ம் மாண்பதாம்; நவ்வரின் முன் அழிந்து பின் மிக்க ணவ்வாம்”2 என்பது வீரசோழிய விதி. இதன் படி ஏழ் + திரை = ஏடிரை ஆகும். ஆனால் இவர், “ழகர ஈற்றொடு வல்லுயிர் புணர்கால் விபத்தியின் மிக்கே விளங்கும்;,,,,,,,,,,,,,, ஒற்றுமையின் மிகாமை பலவாம்,,,,,,,,,,,,,,,, ஆயினும் சிலகால் தமிழ்க்கடல் எனல் போல் மிகுதலும் பாழ்ங்குடி எனல்போல் மெல்லொற்று இடைவருமாறும் இயைந்த தொல் வழக்கே”3 எனவிதி வகுத்து இயல்பாகவே கொள்கிறார். அதே போல ழகர முன் நகரம் வந்து ணவாகத் திரியும் என்ற சிறப்பு விதியும் இவரால் கூறப்படவில்லை. எனவேதான் திகழ்நாகம் எடுத்துக் காட்டப்பட்டது.
(135)
136.ளகர மெய்யும் லகரமெய் கடுத்து
 தானும் கசபவ மெய்களும் பருகும்
 உயிர்மெய்கள் முன்னர் ஒளிரும்; உதாரணம்
 கொள்ளையும், வெள்கலும், அவள்சாடை எனலும்,
 இவள்பார்வை என்கையும், கள்வன்என் றலுமே.