அறுவகையிலக்கணம்103
ளகர மெய்யுடன் - லகரவொற்றே போன்று - தன் இன உயிர்மெய்யும், க, ச, ப, வ, ஆகிய நால்வருக்க உயிர்மெய்களும் மயங்கும், கொள்ளை, வெள்கல், அவள்சாடை இவள்பார்வை, கள்வன் என்பன உதாரணங்கள் ஆம் என்றவாறு.
இவர் கொள்கைப்படி இங்கும் யகரம் கைவிடப்பட்டது.
(136)
137.பின்னர்ஓர் உயிர்மெய் வருமாறு அவிர்வன
 கசட தபற ஙஞநவ மெய்கள்;
 கொக்கும், கச்சியும், வட்டும், பத்தியும்,
 அப்பும், கொற்றியும், கொங்கும், பஞ்சும்,
 நந்தும், செவ்வியும் நவில்உதா ரணமே.
க, ச, ட, த, ப, ற, ங, ஞ, ந, வ ஆகிய பத்து மெய்களும் தம்மையடுத்து வேறொரு உயிர்மெய் எழுத்து வருமாறு விளங்கும். கொக்கு, கச்சி, வட்டு, பத்தி, அப்பு, கொற்றி, கொங்கு, பஞ்சு, நந்து, செவ்வி என்பன இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆம் என்றவாறு.
அறுவகை இலக்கணம் 122, 125, 126, 127, 129 ஆகிய நூற்பாக்களில் இச்சூத்திரப்பொருள் முன்பே கூறப்பட்டுவிட்டது. இதே நூல் 128, 130, 131, 132, 133, 134, 135, 136 ஆகிய நூற்பாக்களில் தம்பின் வேறு உயிர்மெய் பெற்று வருகின்ற ண, ம, ன, ய, ர, ல, ழ, ள என்ற மெய்களைக் காட்டியவர் தொகுத்துக் கூறும் இந்த சூத்திரத்தில் அந்த எட்டு மெய்களையும் விட்டு விட்டார். இதற்கான காரணமும், இச்சூத்திரத்தால் பெறப்படுவதோர் பயனும் விளங்கவில்லை.
(137)
138.ணமன யரல ழளமெய் எட்டும்
 மொழிஈற்று அவிர்தரும்; முறைபயில் உதாரணம்
 கண்கனம் பொன்செய் அவர்நிழல் புகழ்மகள்
 அன்ன மாற்றம் அளவில உளவே.