எழுத்திலக்கணம்104
ண், ம், ன், ய், ர், ல், ழ், ள், ஆகிய எட்டு மெய்யெழுத்துகளும் மொழிக்கு ஈறாகும். முறையே கண், கனம், பொன், செய், அவர், நிழல், புகழ், மகள் என்னும் சொற்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
“ஆவி, ஞணநம னயரல வழளமெய், சாயும் உகரம் நாலாறும் ஈறே”1 என்ற கொள்கையிலிருந்து இவர் வேறுபடுகிறார். நன்னூல் காட்டும் 11 மெய்களில் இவர் இந்நூற்பாவில் ஞ, ந, வ ஆகிய மூன்றையும் நீக்கி எட்டு மெய்களைத் தொகையொடு முற்றும்மை கொடுத்துக் கூறுகிறார். ஏழாமிலக்கணத்தின் “உரிஞ்சு எனும் மொழியை உரிஞ்எனக் குறைத்தும் வென்எனும் சொல்லொடு வெரின்எனும் அவற்றை வெந்என வெரிந்எனத் திரித்தும், பொருநர் என்னும் மாற்றத்து இயைந்த நர்விகுதியை அர் எனப்பிரித்துப் பொருந் என்று ஒரு பதம் உண்டு என உரைத்தும் உழல்வது பிழை; அவை சொல் நயம் உணரார் தோய்தற் பாலவே”2 என்னும் நூற்பாவால் இவர் ஞகர, நகரங்களைத் தள்ளிய காரணம் தெளிவாகிறது. ஆனால் வகரம் இங்கு ஏன் நீக்கப்பட்டது? இவரே அங்கு, “மெய்பதினெட்டிடை ணமனயரல வழளஎன் ஒன்பதும் சொல்லீற்று வருவன”3 என எண் குறிப்பிட்டு நூற்பாச் செய்து தெவ் + எளிஞன் = தெவ்வெளிஞன் என உதாரணமும் காட்டுகிறார்.
இவ்வாறு ஒரே ஆசிரியரால் இயற்றப்பெற்ற இவ்விரு நூல்களும் இக் கொள்கையில் முரண்படுகின்றன. இவ்விரண்டினுள் வகர ஈற்றை ஏற்றுக்கொள்வதே அமைவுடைத்தாம்.
(138)
139.மாற்றத்து ஈற்றில் வரும்ஒற்றுள் ஆறுடன்
 எவ்வுயிர் வரினும்அவ் வவ்வுயிர் மெய்ஆம்;
 பெண்ணரசி, தம்மறிவு, நின்னிகல், பொய்யுறவு,
 கல்லெறிதல், புள்ளொலி என்பவை உதாரணம்.