சொல்லின் இறுதியில் வரும் மெய்களுள் ண, ம, ன, ய, ல, ள ஆகிய ஆறின் முன்னும் உயிரெழுத்துமுதற்சொல் வந்து புணர்ந்தால் வரும் உயிர் நிலைமெய்யைச் சேர்ந்த உயிர்மெய் ஆகும். பெண்ணரசி, தம்மறிவு, நின்னிகல், பொய்யுறவு, கல்லெறிதல், புள்ளொலி என்பன எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு. | “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்”1 என்று நன்னூல் மெய்கள் இரட்டும் இடத்தைத் தெளிவாகப் பாகுபாடு செய்து காட்டுகிறது. இது இவரால் ஏழாமிலக்கணத்தில் “குற்றெழுத்து ஒன்றை முற்கொடு திகழ்ப அல்லா தனவாய் இணைக்குறில் நெட்டெழுத்து ஆகியவற்றொடு திகழ்ஈற்று ஒற்றினம் இரட்டா வண்ணம் இயல்பாப் புணர்ப கதிரழ கென்னக்காயே ழென்னக் கோவி லினிதெனக் கூறுவபோன்றே”2 எனக் கூறப்பட்டுள்ளது. | முன் நூற்பாவில் ஒன்பது மெய்களுள் வகரத்தை விடுத்து எட்டே கொண்டமையின் தன்னொடு தான் மயங்கா ரகர ழகரங்களை விடுத்து ஆறு என்றார். எனினும் வகர ஈற்றையும் இவர் ஏற்றுக் கொண்டமை. முன் நிறுவப் பட்டதாதலின் தெவ்வரசன் போல வகரமும் இரட்டும் எனக் கொள்க. (139) | 140. | மொழிஈற்று அவிர்தரும் ஒற்றுஇனத்து இரண்டு | | பின்வரும் உயிரைஉட் கொண்டுஉயிர் மெய்யாம்; | | அவரிடம் என்பதும், தமிழுணர்வு என்பதும் | | அவற்றின் உதாரணம் ஆம்எனத் தகுமே. |
| மொழியின் இறுதிநிலையாகநிற்கும் மெய்களுள் (ர், ழ், என்ற) இரண்டும் உயிர்முதல்மொழியோடு புணருங்கால் இயல்புப்புணர்ச்சியாம். அவரிடம், தமிழுணர்வு என்பன இதற்கு உதாரணங்களாம் என்றவாறு. |
|
|