எழுத்திலக்கணம்106
இதுவே உறுதியான விதியெனினும் பேச்சு வழக்கு நோக்கி ரகரமெய் இரட்டுதலை, “ரகரம்சிறுபால் விர்ரென எறிந்தான் சர்ரெனச் சென்றது என வருமே”1 எனத்தழுவிக் கொள்கிறார்.
(140)
141.தகர உயிர்மெய் ணனஒற்று உடன்வரின்
 தான்திரிதல் ஒன்று, அவை தம்மையுந் திரித்தல்ஒன்று
 ஆகும் இருவகைத்து; உதாரணம் அறைகெனின்
 மண்டலம், என்றாய் என்பவும் கட்டன்மை
 பொற்றாளம் என்பவும் போல்வன உளவே.
ண்,ன் ஆகிய மெய்களின்முன் தகர உயிர்மெய் வந்து புணர்ந்தால் அவ்வுயிர்மெய் திரிதல், நின்ற மெய்யையும் திரித்தல் ஆகிய இரண்டுவகை விகாரங்களுள் ஒன்று நிகழும். மண்டலம், என்றாய், கட்டன்மை, பொற்றாளம் என்பவை இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
“ணனவல் லினம்வரட் டறவும், பிறவரின் இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு”2 என்பது நன்னூல். மொழிமுதலாகும் க, ச, த, பக்களுள் தகர முதல்மொழிக்கு மட்டும் இங்கு விதி கூறப்பட்டதால் எஞ்சிய க,ச, பக்கள் இயல்பாம் எனப் பெறப்பட்டது. இக்கருத்து, “ணகரம் ஈற்றுஉறு மொழிப்பின் கசப வரின்இரு வழியினும் இயல்பாம்,,,,,,,,,,,,, சேட்கற் பகம் எனக் கவட்சுற்று எனல்போல் விபத்தியில் சிறுபால்திரிதலும் உளவே”3 என்பதால் அறியப்படுகிறது. “னலமுன்றனவும் ணனமுன் டணவும் ஆகும் தநக்கள் ஆயுங்காலே”4என்றதூம்உம் இது. மண் + தலம் = மண்டலம்; என் + தாய் = என்றாய்; கன் + தன்மை = கட்டன்மை; பொன் + தாளம் = பொற்றாளம்.
(141)
142.உயிர்மெய்த் தகரம் லளஒற்று உடன்வரின்
 தானும் கெட்டுஅவை தம்மையும் கெடுத்து
 வேறுஉயிர்மெய் தனித்தும்மெய் முற்கொடும் வரச்செயும்;