அறுவகையிலக்கணம்107
இகறான் என்பதும், அவடாய் என்பதும்,
 புற்றோல், எட்டூணி என்பவும் உதாரணம்.
நிலைமொழியீற்று லகர னகர மெய் முன் வருமொழி முதல் ஆகிய தகரம் புணருங்கால் அவ்வுயிர்மெய்யும் கெடுவதுடன், ஈற்றுமெய்யையும் கெடுத்துத் தகரமல்லாத வேறு உயிர்மெய்கள் (ற,ட) தனியாகவும் ஒற்றடுத்தும் வரும். இகறான், அவடாய், புற்றோல், எட்டூணி என்பன இதற்கு எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
இகல் + தான் = இகறான்; அவள் + தாய் = அவடாய்;
இவற்றுள் ல,ள கெட்டுத் தகரம் றகர டகரமாகத் திரிந்து தனித்து வந்தன.
புல் + தோல் = புற்றோல்; எள் + தூணி = எட்டூணி;
இவற்றுள் ல,ள கெட்டுத் தகரம் றகர டகரமாகத் திரிந்து ஒற்றடுத்து வந்தன.
லகரவொற்றுடன் தகரம் வந்து புணருங்கால் லகரமெய் ஆய்தமாகவும் வருமொழி முதல் றகரமாகவும் சிறுபான்மை திரிதல் இவரால் புறனடையாக, “பல் எனும் மொழியொடு தலையெனல் புணர்கால் பஃறலை ஆதலும்,,,,,,,,,,,,,, அன்னவை பிறவும் பொதிய மால்வரைப் புகழ்பொரு புலமைச் சீரியர் தம்பால் தெரிவது முறையே”1 எனத் தழுவிக்கொள்ளப்பட்டுள்ளது.
“லளவேற் றுமையில் றடவும் அல்வழி அவற்றொடு உறழ்வும் வலிவரின் ஆம்,,,,,,,,,,,”2 என்ற விதியில், முற்கூறிய காரணம் பற்றி, க,ச,ப நீக்கப்பட்டன.
(142)