எழுத்திலக்கணம்108
143.மகர ஒற்றொடு தகரஉயிர் மெய்வந்து
 ஒன்ற நகர ஒற்றா மிளிர்தரும்;
 நந்தாய் எனும்சொல் நவில்உதா ரணமே.
நிலைமொழி ஈற்று மகர மெய்யுடன் தகர வருக்க உயிர் மெய் வருமொழி முதலாக வந்து புணர மகரம் நகரமாகத் திரியும். இதற்கு நந்தாய் என்பது உதாரணம் ஆம் என்றவாறு.
“மவ்வீறு ஒற்றுஒழிந்து உயிர்ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்”1 என்றதனுள் இனமாய்த்திரிதல் இங்குக் காட்டப்பட்டது. நம் + தாய் என்ற புணர்ச்சியில் மகரம் தகரத்திற்கு இனமான நகரமாகத் திரிந்து நந்தாய் என நின்றமை காண்க. உறழ்ச்சி முடிபையும் இவ்வாசிரியர் ஏழாமிலக்கணத்துள், “மகரங் கசத வருங்கால் ஙஞந ஆகும்;,,,,,,,,,,,,,,, பிறவும் உள்ளன,,,,,,,,,,,,,,,,, நுகத்தடி எனவே2” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(143)
144.ணமனலள ஒற்றொரு ககரஉயிர் மெய்வரின்
 திரிதரும் வண்ணம் தெரிக்கும்; உதாரணம்
 மட்குடம், அங்கை, பொற்கோல், விற்கணை,
 முட்கூர் என்ன மொழிவது முறையே.
ண்,ம்,ன்,ல்,ள் ஆகிய நிலைமொழியீற்று மெய்முன் வருமொழி முதலாகிக் ககரவருக்க உயிர்மெய் புணர்ந்தால் அம்மெய்கள் திரியும், மட்குடம், அங்கை, பொற்கோல், விற்கணை, முட்கூர் என்பன இதற்கு உதாரணங்களாம் என்றவாறு.
“ணனவல் வினம்வரட் டறவும் பிறவரின் இயல்பும் ஆகும், வேற்றுமைக்கு”3 “லளவேற் றுமையில் றடவும்”4 “மவ்வீறு,,,,,,,,,, வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்”5 ஆகிய விதிகள் இந்நூற்பாவில் ககரத்திற்குக் கூறப்பட்டன.
(144)