அறுவகையிலக்கணம்111
நிலைமொழி ஈற்று னகர வொற்றும் வருமொழி முதல் நகரத்தை ணகர வொற்றைப் போன்றே தன் இனமாகத் திரிக்கும். நின்னாய் என்பது இதற்கு உதாரணம் ஆகும் என்றவாறு.
இவ்வெடுத்துக்காட்டால் இந்நூற்பா தனிக்குறில் பின்வரும் னகரத்திற்கே உரியது எனத் தெளிவாகிறது. மான் + நோக்கு = மானோக்கு; சேரன் + நாடு = சேரநாடு என வருவன இந்நூற்பா விதியோடு முரணுதல் காண்க.
(148)
149.மகரஒற்று அதன்பின் கசதப வருங்கால்
 அவ்வவ் வொற்றாய் அவிர்தலும் வழங்கும்;
 சிங்கக் காளி, தங்கச் சேலை,
 மனத்திடம், களப்போர் எனும்நான்கு உதாரணம்.
நிலைமொழி ஈற்று மகரமெய் வருமொழி முதலாக வல்லினம் வந்தால் அவ்வின மெய்யாகத் திரிதலும் உண்டு. சிங்கக்காளி, தங்கச்சேலை, மனத்திடம், களப்போர் என்பவை நான்கும் இதற்கு உதாரணங்களாகும் என்றவாறு.
“மவ்வீறு ஒற்றுஒழிந்து உயிர்ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்”1 என்பதில் உள்ள வல்லினம் வரின் மிகுதல் இங்குக் கூறப்பட்டது.
(149)
150.யகரமெய் அதன்பின் ஞகரவுயிர் மெய்வரின்
 அவ்வுடல் ஆதலும், இயைந்தவாறு அவிர்தலும்
 உடைத்து; மெஞ்ஞானமென்று உரைக்கும் சொல்லும்
 வாய்ஞானம் எனலும் வழங்கு உதா ரணமே.
நிலைமொழி ஈற்று யகரவொற்றின்பின் ஞகரம் வந்தால் அம்மெய் ஞகரமாகத் திரிந்து புணர்தல், இயல்பாய்ப் புணர்தல் ஆகிய இரண்டும் உண்டு. மெஞ்ஞானம், வாய்ஞானம் என்பன இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.