“குறில் பின் உறும் யவ்வொடு ஞநமவரில் கெடுதலும் மிகலும் ஆம்.1” என இவர் கூறுவதால் அவ்வுடல் ஆதல் தனிக்குறிலை அடுத்த போதே எனவும், இயல்பாதல் பிற இடங்களில் எனவும் கொள்ளலாம். (150) | 151. | லளமெய்ப் பின்னர் நமஉயிர் மெய்வரின் | | ஆமாறு உதாரணம் அறைகுதும்; கன்னார் | | வாணுதல் என்பவும், கான்முழம், சூண்மொழி | | என்பவும் ஆம்என்று இசைத்திடல் இயல்பே. |
| நிலைமொழி ஈற்று ல, ள, மெய்களோடு நகர மகர உயிர் மெய்கள் புணருங்கால் கன்னார், வாணுதல், கான்முழம், சூண்மொழி என்னுமாறு விகாரமடையும் என்றவாறு. | இந்நூற்பாவுள் விதி இடம் பெறவில்லை. ஏழாமிலக்கணத்தில் “குற்றெழுத்து அதன்பின் குலவிய லகரம் தன்னை நவ்வரில் தகரம் கடுப்பத் திரித்து வேறு உருவாத்திரிதரும்; உதாரணம் பன்னலம், சொன்னூல் அனையபற் பலவே”2 லவ்வீற்றெடு தநஞம வருமாயில் திரிவுள”3 “ளவ்வீற்றதனொடு,,,,,,,,,,,, ஞமவந்துறுங்கால் ஒண்ஞாகர் என்னச் செவ்வேண்மயில் எனத் திரிந்தே றுமே”4“ளகர வொற்றொடு தநவந்தொன்றின் முட்டீய்த்தனன் எனக் கண்ணாற்றம் என இருமைத் திரிவும் தாடருவான் என அவணனியாள் எனக் கேடொடு திரிபும் காணுறும்; சில்லோர் குறில்பின் திரிதரு டவ்வொழித்து ஆய்தம் தயங்கக் கூறுவர்; அம்முறை நலம் அன்று; அறியார் பலரே”5 என்னும் நூற்பாக்களில் இக்கருத்து இடம் பெற்றுள்ளது. | கல் + நார் = கன்னார் - லகரமுன் நகரம் வந்து னகரமாயிற்று | கால் + முழம் = கான்முழம் - லகரமுன் மகரம் வந்து னகரமாயிற்று | |
|
|