அறுவகையிலக்கணம்113
வாள் + நுதல் = வாணுதல் - ளகரமுன் நகரம் வந்து ணகரமாயிற்று.
சூள் + மொழி = சூண்மொழி - ளகரமுன் மகரம் வந்து ணகரமாயிற்று.
(151)
152.ஞகரஉயிர் மெய்யும் மகரஉயிர் மெய்என
 லளஒற் றுடன்உறீஇ னணமெய்கள் ஆகச்
 செய்யும்; உதாரணம் அகன்ஞாலம் எனலும்
 இவண்ஞானி தான்என்று இசைத்தலும் ஆமே.
வருமொழி முதலில் உள்ள ஞகரம் நிலைமொழி ஈற்று லளக்களுடன் புணருங்கால், மகர மெய்யீற்றுப் புணர்ச்சியைப் போன்றே அம்மெய்களை னகர ணகர மெய்களாகத் திரிக்கும். அகன்ஞாலம், இவண்ஞானிதான் என்னும் மொழிகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
“லவ்வீற்றொடு தநஞய வருமாயின் திரிவுள”18 “ளவ்வீற்றதனொடு,,,,,,,,,,ஞம வந்து உறுங்கால் ஒண்ஞாங்கர் என்னச் செவ்வேண்மயில் எனத் திரிந்தே உறுமே”28 என இவ்விதி வேறிடத்தும் இவரால் கூறப்பட்டுள்ளது.
இவள் + ஞானி = இவண்ஞானி
(152)
153.மொழியீற்று மெய்யும் அவண்உள உயிர்மெய்
 உகரமும் தம்பின் யகரஉயிர் மெய்வரின்
 அவ்வவ் வருக்கத்து இகரமாய் அவிர்தரும்;
 அவனியாவன் எனலும், களிற்றியானை எனலும்
 உதாரணம் ஆகும்; குற்றிய லிகரம்
 என்றுஇதைப் புலவோர் இயம்புதல் மரபே.
நிலைமொழியீற்று மெய்களும், உகரம் ஏறிய உயிர்மெய்களும் வருமொழி முதலாக யகரம் வரின் அந்தஅந்த வருக்கத்தைச் சேர்ந்த இகரமாகத் திரியும். இவ்வாறு திரிந்த இகரத்