அறுவகையிலக்கணம்115
“ஆவிபின் தோன்றக் கெடும் குற்றுகரம்”1 “குற்றுகரம் ஆவிவரிற்சிதையும்”2 “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்”3 என்னும் நூல்விதிகளை ஏற்று “உகரத்து இடங்கவர்ந்து அதை ஒரீஇ” என்றார். முன் காட்டப்பெற்ற ஏழாமிலக்கண நூற்பாவிலும் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
(154)
155.முற்றிய லுகரம் திரியாது வரும்உயிர்
 வகர வருக்கம் ஆதலும் சிறிதுஉள;
 பொதுவில், கடுவுணல் போல்வன உதாரணம்.
நிலைமொழி ஈற்று முற்றியலுகரம் உயிரெழுத்துகளுடன் புணருங்கால் திரியாமல் வகர உடம்படுமெய் பெற்று வருதலும் சிற்சில இடங்களில் உண்டு. பொதுவில், கடுவுணல் என்பன எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
முற்றுகரம் வருமொழிஉயிருடன் புணருங்கால் கெடுவதில்லை. எனவே, “இஈஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும்”4 என்ற பொதுவிதிப்படி வகர உடம்படுமெய் பெறுகிறது. இவர் இதனை வேறிடத்தே, “உகரம் ஈற்றுறு பதம் இரண்டு விதமாம் முற்றுகரம் எனவும் குற்றுகரம் எனவும்; அவற்றுள் முந்தியது உயிர்வரில் கேடுறாமையும் ஏனையது கெடுதலும் இயற்கையாகும்”5 என விளக்கியுள்ளார். ஆதலும் சிறிது உள என்ற உம்மையானே அதே, இதழகு, எதுயிர் எனச் சில முற்றுகரங்கள் உகரங் கெட்டு முடிவனவும் வழக்கில் உள என்பது பெறப்பட்டது.
(155)
156.மகர மெய்ப்பின் வகரஉயிர் மெய்வரின்
 மகரக் குறுக்கம் ஆம்என வாய்பாடு;
 உதாரணம் வரும்வாழ்வு எனும்உரை ஆமே.
நிலைமொழிஈற்று மகரவொற்றையடுத்து வருமொழி முதலாக வகரம் அம்மெய் தன்னளவில் குறைந்து மகரக்குறுக்கம் எனப்படும்.