மொழி ஹ, “முப்பது சயவும், மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவும்”1 என்ற விதிபற்றிக் ககரமாயிற்றெனினும் இழுக்கின்றது. (157) | 158. | அகரஆ காரம் அவ்வுயிர் மெய்களில் | | புணர்கால் இம்முறை யாகியும் பொலிதரும்; | | நாகணை, தராதரம், சிவாக்கினை எனல்போல்; | | அன்றியும் பகர்வார் அவைநலம் அலவே. |
| நிலைமொழிஈற்று அகர ஆகாரம் வருமொழிமுதல் அகர, ஆகாரங்களொடு புணர்ந்தால் நாகணை, தராதரம், சிவாக்கிணை என்பதைப் போல வரும். இவ்விதமின்றி இவையும் (தமிழ் இலக்கணப் பொது) விதிகளின் படி நாகவணை, தரவதரம், சிவவாக்கினை என (உடம்படுமெய் பெற்று) வருதல் வேண்டும் என்பார். ஆனால் அது சிறப்பன்று என்றவாறு. | இந்நூற்பாவும் 160 ஆவது சூத்திரமும், “அ, ஆ இறுதி முன் அஆ வரினே இருமையுங்கெட ஆ ஏற்கும் என்ப”2 “இ,ஈ இறுதி முன் இஈ வரினே இருமையும் கெட ஈ ஏற்கும் என்ப”3 ”உஊ இறுதி முன் உஊ வரினே இருமையும் கெட ஊ ஏற்கும் என்ப”4 என்னும் வடமொழி தீர்க்க சந்தியைக் கூறுகின்றன. தர அதரம், சிவ ஆக்கினை என்னும் தொடர்களில் நிலைமொழி வருமொழி இரண்டும் வடசொற்கள். (தற்பவம் ஆகவும் இருக்கலாம்) எனவே தீர்க்க சந்தி பெற்றன. நாக + அணை என்ற தொடரில் முதற்சொல் வடசொல். வருமொழி தமிழ். எனவே நாகாணையும் ஆகாமல், நாகவணையும் ஆகாமல் தனிமுடிவு பெற்றது. நாக + அரி = நாகாரி என்றே வருதல் காண்க. இவற்றை எல்லாம் பவணந்தியார் “இடைஉரி வடசொலின் இயம்பிய கொளாதவும் போலியும் மரூவும் பொருந்தியவாற்றிற்கு இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே”5 என்பதில் அடக்குவார். | |
|
|