எழுத்திலக்கணம்118
நிலைமொழி, வருமொழி இரண்டும் வடமொழிகளாக இருந்தால் அம்மொழி விதியே கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும், அவை மாறியிருப்பின் ஆன்றோர் மரபு பற்றிக் கொள்ள வேண்டுமென்பதுவும் இவ்வாசிரியர் கருத்து. எனவே தான் ஆகியும் என உம்மை கொடுத்தும், நாகணையை எடுத்துக் காட்டியும், அன்றியும் பகர்வார் எனப் பிறர்கோள் கூறியும் சூத்திரஞ் செய்தார்.
(158)
159.அகரஉயிர் மெய்யோடு இகர உகரம்
 புணர்கால் அதன்ஏ, ஓஆம் உதாரணம்
 நரேந்திரன், பயோதரம் எனும்இரு பாற்றே.
(வடமொழிகளாகிய) நிலைமொழி ஈற்று அகரத்தின் முன் வருமொழிமுதலாக இகர, உகரங்கள்வந்தால் முறையேஅவை அகரமேறிய நிலைமொழிஈற்று உயிர்மெய் வருக்கத்தைச் சேர்ந்த ஏகார ஓகாரமாகத் திரியும், நரேந்திரன், பயோதரம் என்பன இதற்கு எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
இந்நூற்பா, “அஆ இறுதிமுன் இஈவரினே இருமையும் கெட ஏ ஏற்கும் என்ப”1 அஆ இறுதி முன் உஊவரினே இருமையும் கெட ஓ எய்தும் என்ப”2 என்னும் குணசந்திவிதி கூறுதலின் உரையில் வடமொழிகளாகிய என்பதுபெய்து உரைக்கப்பட்டது. அகரஉயிர்மெய் எனக்கூறிப் பிறகு அதன் ஏ, ஓ ஆம் என்றது இத்தகைய வடமொழிச் சந்தியில் தமிழ்மரபு பற்றி உடம்படுமெய் வாரா என விலக்குதற்காம். நூற்பா குறில்களையே கூறி இருப்பினும் ரமேசன் போன்றனவும் இலக்கியங்களில் விரவியிருப்பதால் உரையில் கோடலாக ஈ,ஊ என்பனவற்றையும் வருமொழி முதலாகக் கொள்க.
(159)
160.உயிர்மெய் இகரத்து, உயிர்ஆம் இகரம்
 வருங்கால் நெடிலா மன்னுறீஇக் கிடக்கும்;
 முனீந்திரன் என்னும் மொழிஉதா ரணமே.