இம்முறையிலேயே, “எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும் பதமாம்”1 என்கிறது. ஆனால் இவ்வாசிரியர், “எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்”2 என்ற பவணந்தியார் மதம் பற்றி இரு பிரிவாகவே கொள்கிறார். (167) | 3. | றகரமும் ரகரமும் ழகரமும் ளகரமும் | | னகரமும் நகரமும் சிற்சில மொழியில் | | பிறழ்ந்தும் வருவன; உதாரணம் பேசில் | | தறைதரை என்னும் நிலத்தின் பெயரும், | | உழிஉளி என்னும் இடத்தின் பெயரும், | | வனம்வநம் என்னும் காட்டின் பெயரும் | | ஆம்; இவை பற்றி அனைத்தும் பிறழப் | | பொறித்தலும் பேசலும் பொருத்தம் அலவே. |
| சிற்சில வார்த்தைகளில் வல்லின றகரம் இடையின ரகரம் இரண்டும், ழகர ளகரங்கள் இரண்டும், ஈற்று னகரமும் தந்நகரமும் பிறழ்ந்தும் வருதல் உண்டு. நிலத்தைக் குறிக்கத் தறை, தரை எனலும், இடத்தை உணர்த்த உழி, உளி எனலும், காட்டினை வனம், வநம் எனலும் இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். சில இடங்களில் மட்டும் இவ்வாறு பிறழ்ந்து வருதல் பற்றி எல்லா இடங்களிலும் மாற்றி எழுதுவதோ உச்சரிப்பதோ பிழையாகும் என்றவாறு. | மிகமிக அருகியே இப்பிறழ்ச்சி உள்ளது என்பதனால் சிற்சில என்றார். ஈண்டும் பிறழ்வது அத்துணைச் சிறப்பன்று எனத் தெளிவிக்கப் பிறழ்ந்தும் என உம்மை கொடுத்தார். வழக்கில் சில சொற்களில் மட்டும் இத்தகைய பிறழ்ச்சி இடம் பெற்றுவிட்டதைக் கொண்டு வரைமுறையில்லாமல் ஆளல் தக்கதன்று; சான்றோர் இலக்கிய ஆட்சிகொண்டே கையாள வேண்டும் என்பதும், பேசும் போதுகூட எழுத்துகளைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டது. (168) | |
|
|