சொல்லிலக்கணம்128
உடைய முனிவோர் என ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆக்கினும் அமையும். சொற்களின் அருமை, எளிமைகளை உள்ளவாறு நிர்ணயித்தலில்உள்ள சிக்கல்களை நினைந்து, “அறிவார் மலர்த்தாள் அணிதலை எமதே” என்றார்.
(171)
7.எழுத்துஉரு அறியா இயல்பினர் தாமும்
 அறியும் மாற்றம் அனைத்தும்வெண் ணிறமே.
எழுத்தறிவற்ற பாமரர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் சொற்கள் எல்லாம் வெண்ணிறம் படைத்தவையாகும் என்றவாறு.
இந்நூற்பாவால் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் எளிய சொற்கள் யாவும் வெண்ணிறம் வாய்ந்தன என்பது பெறப்பட்டது. வழக்கிலும் வெள்ளைப்பாட்டு, வெள்ளறிவு என வழங்கப்படுதல் காண்க.
(172)
8.கொல்லா விரதக் குருவாம் குறள்போல்
 புந்தியின் அளவில் பொருள்தரும் சொற்கள்
 பளிங்கு நிறம்எனப் பகர்வது முறையே.
(ஒன்றாக நல்லது கொல்லாமை என்று தலையான அறமாகக்) கொல்லா நெறியைப் புகட்டும் ஆசானாகிய திருக்குறளைப் போன்று கற்பவர்கள் தம் அறிவாற்றலுக்கு ஏற்ற அளவு பொருள் கொள்ளும்வகையில் அமைந்த சொற்களைப் பளிங்கு நிறம் உடையன எனலாம் என்றவாறு.
அடுத்தது காட்டும் பளிங்கினைப்போல் இச்சொற்கள் கற்பார் அறிவிற்கேற்பப் பொருள் தருதலின் அந்நிறம் எனப்பட்டது.
(173)
9.பேயொடு குன்றும் பிளக்கு மாறு
 கழறும்நூல் ஆதிய கருத்த நிறமே.
நக்கீரனைச்சிறைப்படுத்திய கற்கிமுகி என்றபேயையும், திருப்பரங்குன்றக் குகையையும் முருகப்பெருமான் வேலால்