பிளக்கும்வண்ணம் பாடப்பட்ட திருமுருகாற்றுப் படை போன்ற நூல்கள் கருமைநிறம் வாய்ந்தன ஆகும் என்றவாறு. |
திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டுள் முதலாவதாகத் திகழும் கடைச்சங்க நூலாதலின் இன்று மிகப்பலருக்கு எளிதில் பொருள் விளங்காத தொன்மையான சொல்லாட்சியைப் பெற்றுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளும் அருமைநோக்கிக் கருத்தநிறம் என்றார். இவர் கருமை என்று கூறுவதால் அத்தகைய நூல்கள் இழிந்தவை எனப் பொருளன்று. பொருள்காண அரியது என்பதே கருத்து. யமகம், திரிபு, ஏகபாதம் போன்ற பிற்காலத்திய மிறைக்கவிகளும் இந்தக் கண்ணோட்டத்தில் கரிய நிறம் உடையனவே. |
நக்கீரர் வரலாறு காளத்திப்புராணம், திருப்பரங்கிரிப்புராணம், அருணகிரிநாதர் புராணம், புலவர் புராணம், திருவிளையாடற்புராணங்கள் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. (174) |
10. | கற்றூ ணிடத்தொரு கடவுட் காட்டலும், | | அரன்மனை அடிசில் ஆக்கச் செய்ததும், | | கணபதி கரத்தால் கயிலை மீதுஉறச் | | சேர்த்ததும் ஆதிய செஞ்சொற் றிரளே. |
|
பிரபுடதேவராயனுக்காகத் திருவண்ணாமலைக் கோயில் தூண் ஒன்றில் முருகப் பெருமானை வரவழைத்ததாகிய அருணகிரிநாதரின் திருப்புகழ், கவிராசபண்டிதரின் சௌந்தரியலகரி மௌ£ழிபெயர்ப்பு, விநாயகர் தன் துதிக்கையால் கயிலையங்கிரியிற் செலவிடுத்த ஒளவையாரின் விநாயகர் அகவல் போன்ற பனுவல்கள் யாவும் செம்மையான நிறமுடைய சொற்கள் ஆகும் என்றவாறு, |
அருணகிரிநாதர் சம்பந்தாண்டான் பொருட்டுக் கம்பத் திளையனாரைக் கற்றூணில் காட்டிய வரலாறு இவ்வாசிரியரால் இயற்றப்பெற்ற அருணகிரிநாதர் புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சங்கராசாரிய சுவாமிகளின் வடமொழி சௌந்தர்யலகரியைக் கவிராச பண்டிதர் மிக இனிமையாகத் தமிழாக்கினார். இதற்குப் பரிசாக உமையம்மையே கவிராச |