சொல்லிலக்கணம்130
பண்டிதரின் மகள் வடிவில் வந்து ஆறுமாதம் அவருக்கு அடிசிற் பணி செய்தார் என்பர். இவ்வரலாறு இந் நூலாசிரியரால் இயற்றப்பெற்ற புலவர் புராணத்தின் கவிராசபண்டிதர் சருக்கத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளது. மூத்த பிள்ளையார் ஒளவை மூதாட்டியைக் கயிலையில் உய்த்த வரலாறும் புலவர் புராணம் ஒளவையார் சருக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.
(175)
11.நால்வரும் பதின்மரும் நவின்ற சொற்கள்
 பொன்மை நிறம்எனப் புகலத் தகுமே.
சைவ சமயாசாரியர்கள் ஆகிய திருஞானசம்பந்தர் முதலிய நால்வரின் திருப்பாடல்களும், வைணவ ஆழ்வார்களாகிய பெரியாழ்வார் முதலிய பதின்மரின் அருளிச்செயல்களும் பொன்னிறம் வாய்ந்தவை எனலாம் என்றவாறு.
(176)
12.நிறத்தின் பகுதியை இவ்வாறு நிகழ்த்தல்
 மிகைப்படும்; புணர்ச்சி பற்றிச் சொற்களின்
 ஐவகை நிறமும் அறிந்துஓர் புலவன்
 முத்தமிழ் பாடல் முறையே ஆதலின்,
 ஆணி போன்றுஓர் பொருட்பெயர் ஐந்தால்
 காட்டுதும்; ஆயினும் கண்ணினும் சிறந்த
 மனத்தாற் காண்டலே வழக்குஎனல் இயல்பே.
சொற்களின் நிறப்பாகுபாட்டை இங்ஙனம் விரித்தால் மிக விரிந்துவிடும், சொற்கள் தம்முள் புணர்வதனால் தோன்றுகின்ற ஐந்து வகையான நிறபேதங்களையும் நன்கு உணர்ந்தே ஒரு புலவன் இயல், இசை நாடகங்களைப் படைக்க வேண்டும். எனவே ஒரே பொருளைக் குறிக்கும் ஐந்து நிறச் சொற்களையும் மாதிரிக்காக ஒன்று காட்டுகின்றோம். என்றாலும் ஊனக்கண்ணைவிடச் சிறந்ததாகிய மனத்தால் சிந்தித்து உணர்தலே தக்கதாகும் என்றவாறு.
செஞ்சொற்களே தம் புணர்ச்சியால் பொருள் காணமுடியாமல் கருஞ்சொற்கள் ஆகிவிடும். யமகம், திரிபு போன்ற மிறைக்கவிகளின் எதுகைகள் இவ்வாறே அமைகின்றன. எனவே