அறுவகையிலக்கணம்131
தனிச்சொல்லின் நிறம் கூற முடியாமல் அதன் இலக்கிய ஆட்சியை வைத்தே தீர்மானிக்க வேண்டி உள்ளது.
ஆணி என்றது ஈண்டு பொன்னின் மாற்றைச் சார்த்து வகையால் அறியப் பயன்படும் உரையாணியை.
(177)
13.உலகினர் உணவுஇனத்து உயர்ந்த ஒருபொருட்
 சோறுஎனல் வெண்சொல்; அனனம் என்கை
 பளிங்கு நிறச்சொல்; பதம்எனல் கருஞ்சொல்;
 அமுதுஎனல் செஞ்சொல்; அடிசில் என்கை
 பொன்னிறச் சொல், இவண் புகன்று காட்டல்
 அம்மையில் புலமை அணையா ராய்இருந்து
 இம்மையில் முயல்வார் இதழ்தல்நன்கு உணர்ந்தே.
மக்கள் உணவு வகைகளில் உயர்ந்த ஒன்றாகிய சாதத்தைச் சோறு எனக் கூறுதல் வெண்சொல் ஆகும்; அன்னம் என்னல் பளிங்குச் சொல்லாம்; பதம் என்பது கருநிற வார்த்தை; அமுது என்றிடில் செஞ்சொல் ஆகும்; அடிசில் எனும் சொல் பொன்னிறம் வாய்ந்தது. முற்பிறவிகளில் புலமை நலம் இல்லாதவர்களாக இருந்து இப்பிறவியிலேயே கற்க முற்படுவோர் இந்நுட்பங்களை உணராராய் எம்மை இகழ்வர் என்பதை நன்கு உணர்ந்திருந்தே யாம் இந்நூலில் சொற்களின் நிறம் பற்றிய இக்கோட்பாட்டைக் கூறுகின்றோம் என்றவாறு.
சோறு வெள்ளை வழக்கு; அன்னம்-பறைவையா, சோறா எனச் சற்றே திகைப்புண்டாக்கி இடம் பற்றித் துணியப்படும்; பதம் என்ற வார்த்தை பல பொருள் ஒரு சொல்லாதலின் எளிதில் விளங்காது. அமுது எனல் மரபோடு கூடிய இலக்கிய வழக்கு. அடிசில் உபசார வழக்கு. இதனை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு பிற சொற்களுக்கும் நிறம் கொள்க. இது சற்றேறக்குறைய வடமொழியார் கூறும் நாளிகேரபாகம், கதலிபாகம், திராட்சாபாகம் என்பனவற்றை ஒத்தது. கருமை, செம்மை, வெண்மை என முறையே அவற்றைக் கொள்ளலாம்.
தவமுடையாராதல் கல்வியுடையாராதல் ஆகிய இரண்டும் முற்பிறவிகளின் பயிற்சியாலேயே சிறப்படைவனவாம், இப்பிற