வியில் முதன்முதலாகக் கற்கத் தொடங்கியவர்கள் பருப் பொருள்களைமட்டுமே அறிவர்; அவர்களுக்கு நுண்பொருள்கள் விளங்கா., அத்துடன் தம் அறியாமையையும் அவர் உணரமாட்டார். தம் அறியாமையை மறந்து அன்னோர் நுண்பொருள்களை எடுத்துக் கூறும் அறிஞர்களைப் பழிப்பர். இவ்வுலக நடைமுறையை நன்கு அறிந்திருந்தாலும் உணரத் தகுதியுடையவர்களுக்காக உரைத்தேன் என்கிறார். (178) |
14. | பளிங்கு நிறமும் பழுதுஇல்பொன் நிறமும் | | வெண்மையில் செம்மையில் மேவல் பற்றி | | முத்தமிழ் ஆம்என மொழிந்தனர் முதியோர். |
|
பளிங்கு நிறமும் பொன்வண்ணமும் முறையே வெண்மையிலும் செம்மையிலும் அடங்குதல் பற்றித் தமிழ் மொழியை முத்தமிழ் என்று முந்நு நூற்புலவர் கூறினர் என்றவாறு. |
இயற்றமிழ் கல்விவல்லாருக்கே விளங்கும் வண்ணம் கடுநடையை உடையதாகவும், இசைத்தமிழ் ஓரளவு கல்விப் பயிற்சி உடையாரும் புரிந்து கொள்ளும்படி செம்பாகமானதாகவும், நாடகத் தமிழ் பாமர ரஞ்சகமாக மிகமிக எளிமையாகவும் இருக்கலாம் என்பது இவர் கருத்து. (179) |
15. | தாயைத் தல்லிஎன்று உரைப்பது போலும் | | திசைச்சொலும் சிற்சில சேர்ந்தமை பற்றித் | | தன்சொலைப் பிறஎனச் சாற்றிடல் மயலே. |
|
அன்னையைக குறிப்பதற்குத் தல்லி என்று கூறுவது போன்ற மிகச் சில திசைச் சொற்கள் தமிழ் மொழிச் சொற்களுடன் கலந்து வழங்குவதைக் கொண்டு தமிழ்ச் சொற்களையெல்லாம் பிறமொழிச் சொற்கள் என்றே கூறுவது அறிவு மயக்கமான செயலாகும் என்றவாறு. |
தல்லி என்பது தெலுங்கு மொழியில் இருந்து வந்த திசைச் சொல், திசைச்சொற்களுக்குக் கூறிய இதனையே வடமொழிக்கும் கொள்க. இடைக் காலத்தே பெரும்பாலானதமிழ்ச் |