அறுவகையிலக்கணம்133
சொற்களை வடமொழிப் பதங்களாக நினைந்து மயங்கிய ஒரு மிகத்தவறான போக்கு காணப்பட்டதால் இந்நூற்பா மிகமிக இன்றியமையாததாகும்.
(180)
16.சொல்லின் பொதுவியல்பு ஒருவாறு சொற்றனம்;
 பிரிவுஇயல்பு அதனைப் பேசுதும்; அவற்றுள்
 சுட்டுச் சொல்முதல் சொல்லுதும் அன்றே.
சொற்களைப் பற்றிய பொதுவான சில செய்திகளைக் கூறும் (முதற் பகுதி ஆகிய) பொது இயல்பை ஓரளவு சொல்லி நிறைவு செய்தோம். இனித் தொடர்ந்து பிரிவியல்பைக் கூறத் தொடங்குகிறோம். அவற்றில் சுட்டுச் சொல்லை முதன்முதலில் விளக்க புகுகிறோம் என்றவாறு.
இந்நூற்பாவால் பொதுவியல்பை உரைத்தாம் எனத் தலைக்கட்டி, பிரிவியல்பு பேசுதும் என்ன நுதலிப்புக்கு. முதலில் சுட்டுச் சொல் உரைப்பாம் என்றார். இவ்வாறு அடுத்த இயல்பாகிய பிரிவு இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது.
(181)
II. பிரிவியல்பு
இவ்வியல்பு சொற்களைச் சுட்டு, பெயர், வினை, ஏவல், அமைதி, தன்மை, உரி, ஒப்பு, விளி, இரக்கம், வியன் முதலிய பலவாறாகப் பிரித்துக் கூறுதலின் பிரிவியல்பு எனப்பட்டது.
இலக்கண நூல்கள் யாவும் சொல் இலக்கணத்தில் தமிழ்ச் சொற்களைப் பெயர், வினை, உரி, இடை என்ற நால்வகையுள் அடக்கி, இருதிணை, மூவிடம், ஐம்பால், எட்டுவேற்றுமை முதலிய சொற்களுக்கே உரிய சிறப்பிலக்கணங்களைக் கூறும். ஆனால் இவர் சொற்களைப் பலவாறு பிரித்துக் கொண்டு ஒரு புதிய நெறியில் தம் போக்கில் செல்கிறார். சொல்லிற்கு வேண்டிய இன்றியமையாத சில இலக்கணங்கள் அறுவகை இலக்கணத்தில் இடம் பெறவே இல்லை. இங்குக் கூறப்படாததால் அவைகள் ஏழாமிலக்கணத்திலே இடம்பெற்றுள்ளன. இவர் சொற்களை மிகப்பலவாறாகப் பிரித்துக் காட்டினாலும்