சொல்லிலக்கணம்134
அவை அனைத்தும் முன்னோர் மொழிந்த நான்கில் அடங்கி விடும் என்பது வெள்ளிடைமலை.
1. சுட்டுச் சொல்வகை
17.அவன்இவன் எவன்எனும் ஆண்பாற் சுட்டும்,
 அவள்இவள் எவள்எனும் பெண்பாற் சுட்டும்,
 அஃதுஇஃது எஃதுஎனும் அலிப்பாற் சுட்டும்
 உலகம்முழுதும் ஓத ஒளிர்வன; அவற்றுள்
 ஆய்தம் நடுவிலா அலிச்சுட்டு மிகுமே,
அவன் இவன் எவன் என்னும் ஆண்பாற் சுட்டுச் சொற்களும், பெண்பாற் சுட்டுச் சொற்களாகிய அவள் இவள் எவள் என்பனவும், அஃது இஃது எஃது என்னும் அலிப்பாற் சுட்டுச் சொற்களும் மக்கள் அனைவரும் அறியும்படி விளங்குவனவாகும். இச் சொற்களுள் அலிப்பால்சுட்டு இடையில் ஆய்தம் பயிலாமல் அது, இது, எது என்ற வடிவிலேயே பெரும்பாலும் வழங்கப்பெறும் என்றவாறு.
“எகரம் முதல்நின்று பொதுப்படச் சுட்டி”1 என்ற தம் கொள்கைக்கேற்ப எவன், எவள், எது என்ற சொற்களைச் சுட்டுச் சொல் ஆக்கினார். வடமொழியில் நபும்ஸகலிங்கம் என்பதற்கேற்ப இவர் இங்கு ஒன்றன்பாலை அலிப்பால் என வழங்குகிறார்.
எனினும் ஏழாமிலக்கணத்தே, “ஆண்பெண் பலர்என ஒன்று பலஎன ஐம்பால் உள்ளன அருந்தமி ழிடத்தே”2 என்றே சொல்லி அலிப்பால் என்ற குறியீட்டைக் கைவிட்டு விடுகிறார்.
(182)
18.உவன்உவள் உதுஎனும் சுட்டுச் சொற்களும்
 ஒவ்வோர் இடத்தே இளைத்துறல் உளவே.