அறுவகையிலக்கணம்135
உவன், உவள், உது என்ற சுட்டுச் சொற்களும் இலக்கியத்தில் ஆங்காங்கு மிக அருகி வழங்குகின்றன என்றவாறு.
இவர் உகரத்தை நடுநிலைச் சுட்டு என்கிறார்.1 அது மிக அதிகமாக வழக்காற்றில் இல்லாமல் மிக அருகியே வழங்கப் படுகின்றன என்கிறார். “பூணாரம் நோக்கிப் புணர்முலை பார்த்தான் உவன்”2 எனவும், “பண்டாரம், காமன் படை உவள் கண் காண்மின்”3 எனவும் எட்டுத்தொகை முழுவதிலும் இவ்விரு சொற்களும் ஒவ்வொரு இடத்தில் மட்டுமே பயின்று வந்துள்ளன. உது என்ற சுட்டு எட்டுத்தொகையில் மொத்தம் 8 இடங்களில் வந்துள்ளது. “உதுக்காண்”4 “உதுவே”5 “உது எம் ஊரே”6 என்னும் மூன்று வடிவில் அச்சொல் பயின்றது.
சொற்களும் என்பதிலுள்ள உம்மை மூன்றையும் அடக்கிய முற்றும்மை
(183)
19.அவன்இவள் எஃதுஎன்ற பகுதி மூன்றும்
 ஒருமைச் சுட்டுச் சொற்கள்எனல் உறுதியே.
அவன் முதலாகச் சொல்லப்பட்ட ஆண், பெண், அலிப்பால் சொற்கள் அனைத்தும் ஒருமைச் சுட்டுச் சொற்கள் ஆகும் என்றவாறு.
உரையிற் கோடலாக உவன், உவள், உது என்னும் முப்பாற் சொற்களும் ஒருமையே எனக் கொள்க.
(184)
20.ஆண்பால் பெண்பால் உணர்திணை என்பதும்
 அலிப்பால் அஃறிணை என்பதும் அழகே.