ஆண்பால் பெண்பால் ஆகிய சொற்கள் உயர்திணை என்றும் அலிப்பாற் சொற்கள் அஃறிணை என்றும் கூறப்படும் என்றவாறு. (185) |
21. | ஒருமைப் பன்மையும் பன்மை ஒருமையும் | | வழங்கல் உண்டு; உதாரணம் முருகர் என்னும் | | ஒருசேய்ப் பெயரும், கடகம் என்னும் | | பன்னிரண்டு யானைப் பெயரும் ஆமே. |
|
சிறப்புப்பற்றி வரும் ஒருமைப் பன்மையும் தொகுதியொருமையாக வரும் பன்மையொருமையும் வழக்கத்தில் உள்ளன. ஒரு சேயோன் ஆகிய தெய்வத்தை முருகர் என்பதுவும், பனிரெண்டு களிறுகளின் கூட்டத்தைக் கடகம் என ஒருமை வாய்பாட்டாற் கூறுவதும் இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. (186) |
22. | அவர்இவர் உவர்எவர் என்னும் சொற்கள் | | உயர்திணை ஒருமைப் பன்மைச் சுட்டே | | ஆகி, ஒவ்வோர் இடத்துஅப் பன்மையும் | | ஆகும்; உதாரணம் அவர்ஞான பண்டிதர், | | இவர்தே வகியார் என்பவும், தனித்தனி | | பன்னகர் வாணரும் கூண்டுள களம்புக்கு, | | எவர்பொன் னூரவர் என்பதும் ஆமெ. |
|
அவர், இவர், உவர், எவர் என்னும் சொற்கள் உயர்திணையில் பெரும்பாலும் (சிறப்புப் பற்றிய) ஒருமைப் பன்மையாகவே வரும். அவர் ஞான பண்டிதர், இவர் தேவகியார் என்பன இதற்கு உதாரணங்கள் ஆம். என்றாலும் அச்சொற்கள் சிற்சில இடங்களில் பன்மையாகவே வழங்கும். பன்நகர் வாணரும் கண்டுள களம்புக்கு, எவர் பொன்னூரவர் என்னும் இரண்டும் இதற்கு எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு. |
உவர் என்ற சொல்லாட்சி அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்நர் ஊரவர் என்ற சொற்களை உதாரணமாகக் காட்டலால் இந்நூற்பா இதில் கூறப்பட்ட நான்கு தனிச் |