சொற்களுக்கேயன்றி உயர்திணைப் பன்மை விகுதியாகிய அர் என்பதற்கும் கொள்ளப்பட்ட வேண்டுவதாகிறது. அர் விகுதிக்கு மேல் கள் விகுதி சேர்த்து வழங்கலே பெரும்பான்மையாகி விட்ட பிறகு எழுந்த நூல் இஃதாதலின் அவர் முதலியன பெரும்பான்மை ஒருமைப் பன்மையாகவே வரும் என்கிறார். ஆனால் பண்டைய நூல்களில் மிகப் பெரும்பான்மை பன்மையாகவேதான் வருகின்றன. (187) |
23. | அவர்கள் என்றிடல் ஆதிய சொற்கள் | | உயர்திணைப் பன்மைச் சுட்டே ஆகி, | | ஒவ்வோர் இடத்து அவ் வொருமைப் பன்மைச் | | சுட்டும் ஆகும்; உதாரணம் சொல்லின் | | வானவர்கள் என்பதும், மந்திரி அவர்கள் | | என்பதும்; இவற்றுள் பின்மொழி போல்வன | | வாசகம் நாடக வாய்பாட் டினவே. |
|
அவர்கள் என்பதைப் போன்ற (விகுதி மேல் விகுதி ஏற்ற) சொற்கள் பெரும்பாலும் உயர்திணைப் பன்மைச் சுட்டாகவே வரும். வானவர்கள் என்ற சொல் இதற்கு எடுத்துக்காட்டாம். எனினும் சிற்சில இடங்களில் மந்திரி அவர்கள் என்பதைப் போன்று ஒருமைப் பன்மைச் சுட்டாகவும் வரும். சிறப்புப்பற்றிய இத்தகைய ஆட்சியை (இயல், இசைத் தமிழ்களைக் காட்டிலும்) உரைநடையிலும் நாடகத் தமிழிலும் அதிகம் காணலாம் என்றவாறு. |
“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும், ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொல் கிளவி இலக்கண மருங்கில் சொல்லாறு அல்ல”1 என்பது பற்றி வாசகம் நாடக வாய்பாட்டினவே என்றார். (188) |
24. | இவைஎனல் ஆதியும் அவைகள் என்றிடல் | | ஆதியும் அஃறிணைப் பன்மைச் சுட்டாம்; | | இவற்றிற்கும் உதாரணம் இயம்பிடல் இழிவே. |
|
|