27. | சுட்டுச் சொல்விதம் சொற்றனம்; இனிப்பெயர்ச் | | சொல்விதம் பகருதும் சூழ்ந்த வாறே. |
|
இதுகாறும் சுட்டுச் சொற்களின் வகைகளைக் கூறினோம். இனித் தொடர்ந்து எம் ஆய்வின் வண்ணம் பெயர்ச்சொற்களின் விதங்களைக் கூறுவாம் என்றவாறு. |
இந்நூற்பாவினால் சுட்டுச் சொல்வகை நிறைவு செய்யப்பட்டு இரண்டாவதாகிய பெயர்ச்சொல்வகைக்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது. (192) |
2. பெயர்ச்சொல் வகை |
28. | இடுகறி காரணம் எனும் இருவகைபெயர்; | | வேல்எனல் வேலன் எனல்உதா ரணமே. |
|
பெயர்ச்சொற்கள் இடுகுறிப் பெயர் என்றும் காரணப் பெயர் என்றும் இருவகைப்படும், வேல், வேலன் என்ற சொற்கள் முறையே இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
பிறர் மதம் பற்றி இவர் இந்நூற்பாவில் இடுகுறிப்பெயர் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்கிறார். ஆயினும் பெயர்கள் அனைத்தும் காரணம் பற்றியனவே என்பதுவும், காரணம் மறந்த பெயர்களே இடுகுறி ஆகின்றன என்பதுவும் இவர் கொள்கை. இதனை இவர், “எவ்வகைப் பெயரும் இலங்குதென் பொதியை மால்வரைக்குவட்டின் மன்னும்மாதவன் அடியவர்க்கு அடிமை ஆவார் அகத்தில் காரணம் என்றே கவின்தரும்; அல்லார்க்கு அறிந்தமை காரணம் அறியாதன முற்று இடுகுறியாம் என்று இயங்குவனவே” எனவும், “அறிந்த காரணம் மறைந்து மற்று அவற்றை என்னிற் பெரியாரிடை வினாவு என்றற்கு ஒல்கிய குரவன் ஒருவன் முன்நாள் இடுகுறி எனும்பெயர் இகத்து அமைத்தனன்; அதைச் சிலர்அலாப் பலரும் செப்ப ஒப்பினரே”1 எனவும் பிறிதோரிடத்தில் கூறுகிறார். |
|