சொல்லிலக்கணம்140
வேல் இடுகுறிப் பெயர். வேலை உடையவன் வேலன காரணப்பெயர் என இந்நூற்பாவில் பிறர்மதம் பற்றிக் கூறியபின் தன் கொள்கையை அடுத்த இரு சூத்திரங்களில் கூறுகிறார்.
(193)
29.பகாப்பதம் இடுகுறி; பகுபதம் காரணம்
 என்பார் பற்பலர்; இடுகுறி எனலால்
 அஃதும்ஓர் குறிப்பால் அவிர்தரும் எனலாம்;
 அக்குறிப்பு அறிவோர் அகத்திய முனிவோன்
 அடியவர் தாமே; ஆயினும் அவர்தாள்
 மலர்தரும் மகரம் வாய்ந்த சென்னி
 உடைமையின் களிப்பால் உரைக்குதும் இதற்கே.
பகுக்கப்பட முடியாத சொற்கள் யாவும் இடுகுறிப் பெயர்கள் என்றும், பகுதி, விகுதி முதலியனவாகப் பிரிபடும் பதங்கள் யாவும் காரணப் பெயர்கள் என்றும் மிகப்பலர் கூறுவார்கள். இடுகுறி என்று கூறுவதனாலேயே அப்பெயரும் ஏதாவது ஒரு குறிப்புப் பற்றியே விளங்கி வருகிறது எனலாம். எந்தக் குறிப்பைக் கொண்டு அப்பெயர் வழங்கப்படுகிறது என்பதைப் பெரும்புலவர்களே அறிவர். எனினும் யாமும் அத்தகைய புலவர்களை வழிபடும் பெரும் பேறுடையோம் ஆதலின் முன் கூறப்பட்ட (வேல், என்ற) இடுகுறியும் காரணம் பற்றியதே எனக் கூறுவாம் என்றவாறு.
“பகுப்பால் பயன் அற்று இடுகுறியாகி முன்னே ஒன்றாய் முடிந்து இயல்கின்ற பெயர்வினை இடை உரி நான்கும் பகாப்பதம்”, “பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் வருபெயர் பொழுது கொள் வினைபகுபதமே”1 என்பனவற்றை நினைந்து கூறியது இது. ஓர் அடையாளமாக இடப்பட்ட பெயர் என்ற அளவிலேயே பவணந்தியார் இடுகுறி என்றார். ஆனால் இவ்வாசிரியர் குறி என்ற சொல்லிற்குக்