சொல்லிலக்கணம்142
பெரும்பாலான ஆண்பாற் பெயர்கள் னகர ஒற்றைக் கொண்டு முடியும். பிரமன், பகவன், குகன், சிவன் என்பன உதாரணங்களாம் என்றவாறு.
மிகை என்றதனாலே சிறுபான்மை இவ்விதிக்கு விலக்கும் உண்டு என்பது பெறப்பட்டது. இது இந்நூல் 200, 204 ஆம் நூற்பாக்களில் கூறப்படும்.
(196)
32.ளகரஒற்று ஈற்றுஉறு பெண்பாற் பெயர்அணி
 உமையாள் கலைமகள் என்பவை ஒத்தே.
ளகரஒற்றைத் தம் இறுதியாகப் பெட்றறு பெண்பாற் பெயர்களின் வரிசை உமையாள், கலைமகள் என்பவைகளைப் போன்றதாகும் என்றவாறு.
ஈற்றுஉறு அணி என்றதனானே உறாத அணியும் உண்டு என்பது பெறப்பட்டது.
(197)
33.ரகரஒற்று ஈற்றுஉறு பன்மைப் பெயர்இசைவு
 அடியார் பாவலர் ஆம்இவை போன்றே.
அடியார், பாவலர் என்பவைபோல உயர்திணைப் பன்மைப் பெயர்களுக்கு (பலர்பால்)ரகரமெய் கடைசியில் வருவது பொருத்தமாம் என்றவாறு.
இதற்கும் விதிவிலக்கு உண்டு. பின்னர் கூறப்படுகிறது.
(198)
34.இகரமும் உகரமும் ஐமுதல் பிறவும்
 அலிப்பால் பெயர்ஈற்று அணுகுதல் அமைவாம்;
 வாரிதி முத்து மஞ்ஞை என்பவும்
 மரம்கல் ஆதியும் ஆம்எனல் வழக்கே.
இ, உ, ஐ முதலிய மொழியீற்றெழுத்துகள் பலவும் அலிப்பால் பெயர்ச்சொல்லின் (ஒன்றன்பால்) கடைசியில் அமைதல் ஏற்புடைத்தே என்றவாறு, வாரிதி, முத்து, மஞ்ஞை, மரம்,