அறுவகையிலக்கணம்143
கல் போன்ற சொற்கள் இதற்கு உதாரணங்கள் ஆகும் என்றவாறு.
பிறவும் என்று பொதுவாகக் கூறியதால் மொழியீற்று எழுத்துகள் அனைத்தும் கொள்ளப்பட்டன, கண், கோட்டான், காய், தளிர், தெவ், ஊழ், கவுள் எனப் பல்வேறு ஈறுகளும் வரையறையின்றி வரும்.
(199)
35.அஃறிணை போலும் உயர்திணைப் பெயர்கள்
 சிவைதிரு கணபதிமால் எனல் பலவே.
சிவை, திரு, கணபதி, மால் போன்ற பல பெயர்கள் அஃறிணையைப் போன்ற (முறையே ஐ, உ, இ, மெய் ஈற்றைப் பெற்ற) உயர்திணைப் பெயர்கள் ஆகும்.
எனவே சொற்களின் ஈற்றை மாத்திரம் கொண்டு பெயர்களின் திணை, பால் வகுக்க முடியாது என்றாராயிற்று. பெரும்பான்மையான சொற்கள் பொதுவாக இந்த இந்த ஈற்றைக் கொண்டு விளங்குகின்றன எனக் கூறப்படுகின்றனவேயன்றி இவையே வரும் என விதி வகுக்கப்படவில்லை.
(200)
36.உயர்திணைப் பன்மை போலும் அஃறிணை
 உம்பரும் செக்கரும் இடங்கரும் அனையவே.
உம்பர், செக்கர், இடங்கர் போன்ற அஃறிணைப் பெயர்கள் (ரகர மெய்யை ஈறாகப் பெற்று) உயர்திணைப் பன்மைப் பெயர் போன்று (பலர்பால்) விளங்குகின்றன என்றவாறு. இடங்கர்-முதலை
(201)
37.முப்பாற் பொதுப்பெயர் மூர்த்தி ஆ தியவே
 
மூர்த்தி போன்றசில பெயர்கள் ஆண், பெண், அலி ஆகிய மூன்று பால்களிலும் பொதுவாக வழங்கப்படும் என்றவாறு.