சொல்லிலக்கணம்144
இராமமூர்த்தி, சீதை கருணாமூர்த்தி, அது அநுமனின் சிலாமூர்த்தி என முப்பாலிலும் வருதல் காண்க.
(202)
38.ஆண்பால் போலும் அஃறிணைப் பெயர்கள்
 கலன்புலன் ஆதிய கணக்குஇலா தனவே.
ஆண்பால் ஒருமையைப் போன்று னகர மெய்யால் முடியும் கலன், புலன் முதலிய எண்ணற்ற சொற்கள் வழக்கில் உள்ளன என்றவாறு.
(203)
39.ஒன்றன் பெயர்மற் றொன்றுஎனக் காட்டும்
 பெயர்மா றாட்டம் அனைத்தும் பெரியோர்
 பால்அடைந்து உணர்ந்து பகர்வது முறையே.
ஒரு பாலுக்குரிய பெயர்ச்சொல் (தன் ஈற்றெழுத்தால்) வேறொரு பாலுக்குரியதாகக் காட்சியளிக்கும். இவ்வேறுபாடுகளை எல்லாம் கல்வியில் தம்மினும் பெரியவர்களை அணுகி அறிந்து பயன்படுத்த வேண்டும் என்றவாறு.
இவர், அன், அள், அர் போன்ற “பெயரினும் சிலவாம் வினையின் விகுதி”1 களைக் கொள்ளாமல் ஈற்றெழுத்தை மட்டுமே கொள்வதால் 200, 201, 203 ஆகியவற்றுடன் இந்நூற்பாவும் வேண்டப்பட்டது. இவர் மாணவர் உய்த்து உணர்ந்து கொள்ளுமாறு விதிகளைச் செய்யாமல், “புலவரும் மயங்கும் புன்மை சான்ற சூத்திரம் புகன்று துவக்குறப் படுத்தாது இன்சுவைப் பாளிதம் எனத்தகு பாவால் தெளியுமாறு தெரிக்க” விரும்புவதால் 204 ஆம் நூற்பாவே போதுமானதாயிருக்க 200, 201, 203 ஆகிய தனித்தனி நூற்பாக்களையும் செய்தார்.
சிவை, உமை - அஃறிணை போன்ற உயர்திணைப்
பெண்பால் சொற்கள்
கணபதி, மால் - அஃறிணை போன்ற உயர்திணை ஆண்பால் சொற்கள்