அறுவகையிலக்கணம்145
உம்பர், இடங்கர் - உயர்திணைபோன்ற அஃறிணை ஒருமைச்சொற்கள்
கலன், புலன் - உயர்திணை ஆண்பால்போன்ற அஃறிணைச்சொற்கள்
உறையுள், கள் - உயர்திணை பெண்பால்போன்ற அஃறிணைச்சொற்கள்.
இவ்வறுவகையிலக்கணம் பெரிதும் பள்ளிச் சிறார்களின் தகுதியில் உள்ள மாணவர்களை நினைந்தே செய்யப்பட்டமையில் பொருள் அறிந்து திணை, பால் காண்க என்னாது பெரியோர்பால் அடைந்து தெளிக என்றார்.
(204)
40.பெயர்ச்சொல் ஒருவாறு பேசினம்; வினைச்சொல்
 அறிந்த வாறுஈண்டு அறைகுதும் அன்றே.
பெயர்ச்சொற்களைப்பற்றிய சில செய்திகளை இதுவரை உரைத்தாம். இனி அடுத்து வினைச் சொற்களைப்பற்றி யாம் அறிந்தஅளவு கூறுவாம் என்றவாறு.
இச்சூத்திரத்தால் பெயர்ச்சொல்வகை என்னும் இப்பிரிவு நிறைவுசெய்யப்பட்டு மூன்றாவதாகிய வினைச்சொல்வகைக்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது.
(205)
3.வினைச்சொல் வகை
41.உண்டல் உறங்கல் போதல் வரல்முதல்
 அனையன பிறவும் பொதுவினை யாமே,
உண்டல், உறங்கல், போதல், வரல் போன்றுள்ள சொற்கள் அனைத்தும் பொதுவினைகளாம் என்றவாறு.
இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்களைப் போன்றவை அனைத்தும் திணை, பால், இடம், காலம் போன்றவைகளைக் காட்டாமல் தொழிலை மட்டும் உணர்த்தி நிற்றலின் பொது வினை என்றார், இலக்கணத்தில் இவை தொழிற்பெயர் எனப்படும்.