இச்சொற்களை இவர் வினை எனினும், உண்டலை விரும்பான், உறங்கல் நன்று என்பனபோல் இவை பெயர்ச் சொற்களாகவே ஆளப்பெறும். |
தமிழ் இலக்கண மரபின்படி பொதுவினை என்ற குறியீடு தொழிற்பெயரை உணர்த்தாமல் தன்வினை, பிறவினை ஆகிய இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் வினைகளைக் குறிக்கும். எனவே இப்பெயராட்சி இந்நூலிற்கே உரியது, (206) |
42. | வந்தேன் இருந்தேன் என்பவை முதலின | | தன்வினை ஆம்எனச் சாற்றுதல் வழக்கே. |
|
வந்தேன் இருந்தேன் என்பனவற்றைப் போன்ற வினைச் சொற்களைத் தன்வினை எனக்கூறுதல் மரபாம் என்றவாறு. (207) |
43. | வைதான் என்பதும், சிரித்தாள் என்றலும், | | ஓடியது என்கையும், அன்னவை பலவும் | | முப்பாற் பிறவினை ஆம்எனல் முறையே. |
|
வைதான், சிரித்தாள், ஓடியது ஆகிய சொற்களும் இவைபோன்ற பிறவும் (முறையே ஆண், பெண், அலி ஆகிய) முப்பால் பிறவினைகள் ஆகும் என்றவா. |
பிறவினைச் சொற்களுக்கு மட்டும் பால்வரையறை காட்டியதால் தன்வினைச் சொற்களில் அது தெரியாது என்பது பெறப்பட்டது. (208) |
44. | போயினன் என்றிடல் ஆதிய பிறவினை | | ஆயினும் தன்வினை ஆதலும் உடைத்தே. |
|
போயினன் என்பதைப் போன்ற வினைகள் பெரும்பாலும் பிறவினையே ஆயினும், சிற்சில இடங்களில் தன்வினையாக வருதலும் உள என்றவாறு. |