“கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்”1 எனத் தன்வினையாகவும், “கண்டனன் அநுமனும் கருத்தும் எண்ணினான்”2 எனப் பிறவினையாகவும் வந்தமை காண்க. (209) |
45. | போன செய்த வைத்த எனல் ஆதிய | | வினைமுற்று இறந்த காலம் தழுவுமே. |
|
போன, செய்த, வைத்த என்பனவற்றைப் போன்ற சொற்கள் இறந்தகால வினைமுற்றுகளாம் என்றவாறு. |
இவை செய்த என்னும் வாய்பாட்டுப் பெயர் எச்சங்கள் ஆவதன்றிப் பசுக்கள் போன, பறவைகள் ஒலித்த எனச் சிறுபான்மை பலவின்பால் இறந்தகால வினைமுற்றாகவும் ஆளப்படுதலின் ஈண்டு எடுத்துக் காட்டினார். இவற்றைப் போயின, செய்தன, வைத்தன என்பனவற்றின் விகாரமெனக் கொள்ளினும் ஆம். (210) |
46. | ஆகின்ற அழிகிற எனும்இவை அனையவை | | நிகழ்கா லத்தொடு கூடிநின் றனவே. |
|
ஆகின்ற, அழிகிற போன்ற சொற்பகுதிகள் (எச்சம், முற்று என்ற இரண்டு வகையிலும்) நிகழ்காலத்தைக் காட்டுகின்றன என்றவாறு. |
முன்நூற்பாவைப் போன்று முற்று எனத் திட்டமாகக் கூறாது இது எச்சம், முற்று ஆகிய இரண்டிற்கும் பொது என உணர வைத்தார். ஆகின்ற போன்றவைகள் அப்படியே முற்றுச் சொல்லாக அமையாமல் ஆகின்றவன், அழிகிறது என விகுதி பெற்றே முற்றாதலின் உரையில் சொற்பகுதிகள் எனப்பட்டது. இதில் ஆநின்று, கின்று, கிறு எனும் நிகழ்கால இடைநிலைகளில் கின்று, கிறு என்னும் இரண்டும் காட்டப்பட்டன. (211) |
47. | பிறக்கும் பேசும் பிணங்கும்எனல் ஆதிய | | எதிர்கா லத்தோடு இசைந்துநிற் பனவே. |
|
|