பிறக்கும், பேசும், பிணங்கும் என்பதைப் போன்ற சொற்கள் (எச்சமாகவும் முற்றாகவும்) எதிர்காலத்தைக் காட்டும் என்றவாறு. (212) |
48. | சொல்லி நின்று வந்துஎனல் ஆதிய | | மற்றும்ஓர் வினையை வருவிக்கும் ஆதலின் | | வினையெச்சம் ஆம்என விளம்பிடல் இயல்பே. |
|
சொல்லி, நின்று, வந்து என்பனவற்றைப் போன்ற சொற்கள் தம் பொருளை முற்றுவிக்க வேறு ஒரு வினைச் சொல்லினை வேண்டி நிற்கும் ஆதலின் இத்தகையவை வினையெச்சம் எனக் கூறப்படும் என்றவாறு. (213) |
49. | ஈகை ஆதிய நல்வினை; ஏற்கை | | ஆதிய தீவினை அறிஞராம் அவற்கே. |
|
பிறருக்கு அளித்தல் முதலியன நல்வினைகளாம். பிறரிடம் ஏற்றல் முதலியன தீவினைகளாம். இவற்றை அறிஞர்கள் அறிவர் என்றவாறு. |
நல்வினை, தீவினை என்பன பொருளுலகில்தான் உண்டு. இலக்கணமாகிய சொல்உலகில் (சப்தப்பிரபஞ்சம்) வினைச்சொற்களில் நல்லவை, தீயவை என்ற பாகுபாடு கிடையாது. இலக்கணப் பிழையில்லாமல் ஆளப்பட்டால் கொல்லுதலும், கொன்றதைத் தின்னுதலும் கூட நல்ல வினைச்சொற்களே. இவர் இலக்கணத்தோடு நீதியும் புகட்டுவான் வேண்டி இந்நூற்பாச் செய்தார். (214) |
50. | வினைச்சொல்இவ் வண்ணம் விளம்பினம் இனிப்பாத் | | தொறும்ஒரு வகைச்சொற் சொல்லுதல் அன்றே. |
|
வினைச்சொற்களைப்பற்றி இதுகாறும் சொன்னோம். இனித் தொடர்ந்து நூற்பாவுக் கொன்றாகப் பலவகைச் சொற்களைப் பற்றிக் கூறுவாம் என்றவாறு. |